AI துறையின் "ராஜமாதா.." அமெரிக்க டெக் உலகை மிரள வைத்த சீன பெண்! யார் இந்த ஃபெய்-ஃபெய் லி?
சியாட்டில்: ஐ துறையில் இப்போது பல்வேறு ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. பல சர்வதேச ஆய்வாளர்கள் இதில் முன்னோடியாக இருந்து வருகிறார்கள். அப்படி ஏஐ துறையில் சாதித்துள்ள ஒரு முக்கியமான நபர் தான் ஃபெய்-ஃபெய் லி! ஏஐ துறையின் "ராஜமாதா" என அழைக்கப்படும் இவருக்குச் சமீபத்தில் குயின் எலிசபெத் பரிசு வழங்கப்பட்டது. யார் இந்த ஃபெய்-ஃபெய் லி.. இவரது பின்னணி குறித்துப் பார்க்கலாம்!
AI துறை இப்போது படுவேகமாக வளர்ந்து வருகிறது. உலகின் எல்லா துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. மேலும், இந்த ஏஐ துறையில் இப்போது பல புதிய நபர்கள் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்.

ஏஐ
இந்த ஏஐ துறையில் சாதனை படைத்தவர் தான் டாக்டர் ஃபெய்-ஃபெய் லி.! இவர் ஒரு சாதாரண பெண்மணி அல்ல ஏஐ துறையில் இப்போது ஆதிக்கம் செலுத்தி வரும் முக்கியமான நபர்களில் ஒருவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறையின் பேராசிரியரான இவர், இப்போது 'வேர்ல்ட் லேப்ஸ்' என்ற AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
'வேர்ல்ட் லேப்ஸ்' நிறுவனம் தொடங்கி ஓராண்டு மட்டுமே ஆகும் நிலையில், ஏற்கனவே அவரது நிறுவனத்தின் மதிப்பு ஒரு பில்லியன் டாலர்களை தாண்டிவிட்டது. இதன் காரணமாகவே செயற்கை நுண்ணறிவின் ராஜமாதா என்றே இவரை அழைக்கிறார்கள். இவருக்குச் சமீபத்தில் தான் குயின் எலிசபெத் பொறியியல் பரிசும் வழங்கப்பட்டது. ஏஐ துறையில் சிறந்து விளங்கும் ஏழு பேருக்கு மட்டுமே இந்து விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த விருதைப் பெற்ற ஒரே பெண் இவராவார்.!
சீனாவில் பிறந்தவர்
இருப்பினும், இந்த இடத்தை அடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கடந்து வந்துள்ளார். சீனாவில் பிறந்த பெய் லி தனது குழந்தைப் பருவத்தை அங்கேயே கழித்தார். அவருக்கு 15 வயதான போது, அவரது குடும்பத்தினர் அமெரிக்காவில் குடியேறினர். அப்போதும் அவரது குடும்பத்தினர் வறுமையிலேயே இருந்தனர். நியூ ஜெர்சியில் அவரது குடும்பத்தினர் ட்ரை வாஷ் கடை நடத்தி வந்த நிலையில், டீன் ஏஜ் பருவத்திலும் அவர் தனது பெற்றோரின் உதவினார். பல ஆண்டுகள் அவர் இப்படியே படிப்பையும் வேலையைச் சேர்த்தே செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நாங்கள் அப்போது பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இல்லை. எனது பெற்றோர்கள் பல வேலைகளைச் செய்தனர். நானும் சீன உணவகங்களில் வேலை செய்தேன். பிறகு சொந்தமாக ஒரு வாஷிங் கடையை நடத்தினோம். அங்கிருந்தபடியே நான் படித்து பட்டம் பெற்றேன்" என்றார்.
யார் இவர்?
லி தனது இளங்கலை பட்டப்படிப்பை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும், பின்னர் முனைவர் பட்டத்தை கலிபோர்னியாவில் உள்ள கால்டெக்கிலும் பெற்றார். பிறகு அவர் கூகுள் கிளவுட் நிறுவனத்தில் ஏஐ பரிவில் தலைமை அதிகாரியாக வேலை செய்தார். 2018 அக்டோபர் மாதம் வரை அவர் அங்கேயே வேலை செய்தார். பிறகு சில ரகசிய ஆவணங்கள் கசிந்ததால் அந்த வேலையை விட்டு விலகினார்.
ஆனால், அதன் பிறகும் ஏஐ துறையில் தனது ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார். பல வேலை செய்த அவர் கடந்தாண்டு 'வேர்ல்ட் லேப்ஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். வெறும் ஓராண்டிலேயே புதிய உச்சத்தை அவரது நிறுவனம் அடைந்தது.
இமேஜ்நெட்
2006ல் தொடங்கப்பட்ட இமேஜ்நெட் என்ற திட்டத்தில் அவர் வேலை செய்திருந்தார். இந்த திட்டத்தில் பல லட்சம் டிஜிட்டல் போட்டோக்கள் வகைப்படுத்தப்பட்டது. இது நவீனக் கால ஏஐ அமைப்புகளுக்கு ஒரு பயிற்சிக் களமாக மாறியது. டீப் லேர்னிங் துறையில் புதிய புரட்சியையும் கூட ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இப்போது அவரது 'வேர்ல்ட் லேப்ஸ்' நிறுவனம் அடுத்த கட்டமாக உலக மாடல்களை (world models) உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவும் ஏஐ துறைக்கு முக்கியமானதாக இருக்கும்.!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications