ஜாம்பவான்களை திரும்பி பார்க்க வைத்த அமெரிக்க இந்தியர்.. பெர்ப்ளெக்ஸி AIஐ வாங்க போட்டி போடும் ஆப்பிள், பேஸ்புக்
சியாட்டில்: டெக் உலகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாக மாறி வருகிறது. ஏஐ ரேஸில் முன்னணியில் இருக்க பல்வேறு நிறுவனங்களும் போட்டிப் போட்டு வருகின்றன. இதற்கிடையே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உருவாக்கிய பெர்ப்லெக்ஸிடி ஏஐ பக்கம் இப்போது பலரது கண்கள் திரும்பியுள்ளன. ஆப்பிள் மற்றும் மெட்டா என டெக் உலக ஜாம்பவான்கள் இரண்டுமே பெர்ப்லெக்ஸிடி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கு தான் உலகின் பெரும்பாலான டெக் நிறுவனங்களின் தலைமையிடமாக இருக்கிறது. அங்கு நீங்கள் மார்க்கெட்டில் இருக்கச் சிறந்ததைக் கொண்டு வருவதை விட முதலில் ஒரு விஷயத்தைக் கொண்டு வருவதே முக்கியம். இதனால் சிலிகான் பள்ளத்தாக்கு எப்போதுமே கிட்டதட்ட போர்க்களம் போலத் தான் இருக்கும்.

ஏஐ போர்
இப்போது அங்கு ஏஐ சுற்றி போர் நடந்து கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம். ஒவ்வொரு நிறுவனமும் ஏஐ ரேஸில் முன்னிலையில் இருக்க விரும்புகிறார்கள். ஏஐ துறையில் பலரையும் வியக்க வைக்கும் வகையில் ஓபன் ஏஐ தனது சாட்ஜிபிடி மூலம் சந்தையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. இது இதர நிறுவனங்கள், குறிப்பாக ஆப்பிள், மெட்டா (பேஸ்புக்) நிறுவனங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக டெக் நிறுவனங்கள் ஒரு விஷயத்தை உருவாக்க முடியவில்லை என்றால் பெரிய தொகையைச் செலவிட்டு அந்த துறையில் சிறந்த நிறுவனத்தை வாங்கி தன்னுடன் இணைத்துக் கொள்ளும். பல டெக் பள்ளத்தாக்கு நிறுவனங்கள் இந்த அணுகுமுறையைத் தான் பின்பற்றுகின்றன. அப்படி தான் இப்போது ஏஐ ரேஸில் பெர்ப்லெக்ஸிடி (Perplexity) பக்கம் அனைவரது கண்ணும் திரும்பியுள்ளது.
இந்திய வம்சாவளி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரது கம்பெனி தான் பெர்ப்லெக்ஸிடி ஏ.ஐ.! இந்த கம்பெனியை வாங்கவே இப்போது ஆப்பிள் மற்றும் மெட்டா இரண்டும் ஆர்வம் காட்டி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. டெக் உலகில் ஆதிக்கம் செலுத்தும் இரு பெரு நிறுவனங்களுமே ஒரே நேரத்தில் பெர்ப்ளெக்ஸிடியை குறிவைத்துள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது. இரு நிறுவனங்களுமே ஏன் பெர்ப்லெக்ஸிடி வாங்க முயல்கிறது என்பதைப் பார்க்கும் முன்பு.. பெர்ப்ளெக்ஸிடி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பெர்ப்லெக்ஸிடி ஏஐ
அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ஆண்டி கோன்வின்ஸ்கி, டெனிஸ் யாரட்ஸ் மற்றும் ஜானி ஹோ ஆகியோர் இணைந்து 2022ல் பிரான்சிஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி தான் பெர்ப்லெக்ஸிடி! அறிவு மற்றும் தகவல்களை அனைவரும் அணுகக்கூடிய வகையில் ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருந்தது. சோனார் என்ற சொந்த எல்.எல்.எம்-ஐ (large language models) வைத்திருந்தாலும் இதை மட்டும் தான் யூசர் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்பிய எல்எல்எம்-ஐ பயன்படுத்தி தேவையான அம்சங்களை யூஸ் செய்யலாம் என்பதே பெர்ப்ளெக்ஸிடி பிரபலமடைய உதவியது.
ஏஐ ரேஸை பொறுத்தவரை ஓபன் ஏஐ மற்றும் கூகுள் முன்னணியில் உள்ளன. மற்ற நிறுவனங்கள் ஏஐ ரேஸில் பின்தங்கி உள்ளது என்பதே முக்கியம். இதன் காரணமாகவே பெர்ப்லெக்ஸிடி பக்கம் ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்கள் திரும்பியுள்ளன.

ஆப்பிள்
இதில் ஆப்பிள் நிறுவனம் பெர்ப்லெக்ஸிடியை அணுகியுள்ளது ஆச்சரியமான விஷயம் தான். ஏனென்றால் பொதுவாகவே ஆப்பிள் நிறுவனம் இதுபோல மற்ற நிறுவனங்களை அவ்வளவு சீக்கிரம் வாங்காது. அவர்கள் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் உள்ளேயே தயாரிக்கவே விரும்புவார்கள். லேப்டாப், ஐபோன் என அவர்களின் வெற்றிக்கு இதுவே காரணமாக இருந்துள்ளது. ஆனால், ஏஐ உலகம் இப்போது வேகமாக மாறி வருகிறது.
சிரி மூலம் அவர்கள் ஏஐ கொண்டு வர சில காலமாகவே முயன்றாலும் அது பெரியளவில் கை கொடுக்கவே இல்லை. இதனால் ஏஐ துறையில் ஆப்பிள் இருப்பு இல்லாமலேயே போய்விட்டது. அந்த நிலையை மாற்றவே பெர்ப்ளெக்ஸிடியை வாங்க ஆப்பிள் ஆர்வம் காட்டுகிறது. இதற்காக பெரிய தொகையையும் கூட கொடுக்க ஆப்பிள் ரெடியாக இருக்கிறது. ஆப்பிளின் எகோ சிஸ்டம் எந்தளவுக்கு ஒருங்கிணைந்து இருக்கும் என்பதைத் தனியாக நாம் சொல்லத் தேவையில்லை. அதில் ஏஐ வந்தால் அதில் யூசர் அனுபவம் இன்னுமே வேற லெவலுக்கு போகும் என்பதில் சந்தேகம் இல்லை.
மெட்டா
அடுத்து மெட்டா, அதாவது பேஸ்புக்கின் தாய் நிறுவனம். மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் ஆப்பிளுக்கு நேர் எதிரானது. மெட்டா கடந்த காலங்களில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என பல நிறுவனங்களை வாங்கியுள்ளது. இதுவே மெட்டாவின் அசுர வளர்ச்சிக்கும் முக்கியமான காரணம். உதாரணம். எனவே, ஏஐ துறையிலும் அதுபோல முக்கிய நிறுவனத்தை வாங்கலாம் என்பதே அவரது திட்டமாக இருக்கிறது.

ஏனென்றால் சிறந்த ஊழியர்களைக் கொண்டிருந்தாலும் ஏஐ துறையில் மெட்டா நிறுவனத்தால் சாதிக்க முடியவில்லை. அவர்களின் மெட்டா ஏஐ-க்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மார்க் கடும் அழுத்தத்தில் இருக்கிறார். பெர்ப்லெக்ஸிடி வாங்க செலவு மிக மிக அதிகமாகும் என்றாலும் கூட அதற்கு மார்க் ரெடியாக இருக்க அதுவே காரணம். அதிகபட்ச யூசர்களை கொண்ட டெக் நிறுவனமாக இருப்பதால் அதிக மக்களை சென்றடைய பெர்ப்லெக்ஸிடி தான் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
அடுத்து என்ன
இப்படி பெர்ப்ளெக்ஸிடி ஏ.ஐ.-யை வாங்குவதற்கு ஆப்பிள் மற்றும் மெட்டா ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையேயும் கடும் போட்டி இருக்கிறது. ஏஐ தான் எதிர்காலம் என்பதை உணர்ந்தே இரு நிறுவனங்களும் பெர்ப்லெக்ஸிடியை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications