2021 ஆங்கிலப்புத்தாண்டு ராசி பலன்: மிதுனம் ராசிக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரும்

ஆங்கில புத்தாண்டு பிறக்கப் போகிறது. 2021ஆம் ஆண்டில் கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியினால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020 ஆம் ஆண்டு முடிந்து 2021ஆம் ஆண்டு முடியப்போகிறது. பிறக்கப்போகும் புத்தாண்டில் நவ கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தினால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
எட்டுக்கு உடையவன் எட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இந்த சனியால் உங்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கும். சனியோடு சேர்க்கை பெற்ற குருவினால் நீச்ச பங்க யோகமும் கிடைக்கும். 2021ஆம் ஆண்டில் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகிறீர்கள்.

வேலையிழந்து தவிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சில சொந்தமாக வேலை செய்வீர்கள். வெற்றியும் சந்தோஷமும் தரும் ஆண்டாக 2021ஆம் ஆண்டு அமைந்துள்ளது. மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தினை பார்த்தால் கடந்த காலங்களில் ஜென்ம ராசியில் இருந்த ராகு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவும் சனியும் அஷ்டமத்தில் அமர்ந்துள்ளன. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்று சொல்வார்கள். எட்டாம் வீட்டில் சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி சஞ்சரிக்கிறார்.

பிரச்சினை மேல் பிரச்சினைகளை சந்தித்து வந்தீர்கள். இப்போது உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்க எட்டாம் வீட்டில் குரு உடன் சனி வந்து அமர்ந்துள்ளார். சனியும் குருவும் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் இனி சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். குரு உங்களுக்கு பாதகாதிபதி. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற அமைப்பில் நல்ல பலன்களே கிடைக்கும்.

சுப விரைய செலவுகள் வரும்

சுப விரைய செலவுகள் வரும்

குருவினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு கிடைப்பதால் பணவருமானம் அதிகரிக்கும். அதே நேரத்தில் விரைய ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் சுப விரைய செலவுகளும் ஏற்படும். ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தை பார்வையிடுவதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

உணவு விசயத்தில் கவனம்

உணவு விசயத்தில் கவனம்

எதிர்பார்த்ததை விட நிறைய செலவுகள் வரும். பிள்ளைகளால் சுப செலவுகள் வரும். உயர்கல்வி யோகம். சிக்கனத்தை கடைபிடிக்கவும். குழந்தைகளுக்கு திருமண யோகம் வரும் சுப காரியங்கள் கை கூடி வரும். விரைய ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். காரணமான உணவுகளை தவிர்க்கவும்.

அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம்

அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம்

அரசியல்வாதிகளுக்கு இது சோதனையாக கால கட்டம். பேச்சுக்களை யோசித்து பேசவும். சனி உங்களுடைய வாக்கு ஸ்தானத்தை பார்வையிடுவதால் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவமானம் ஏற்படாமல் தவிர்க்க குல தெய்வ வழிபாடு அவசியம்.

குருவின் பார்வையால் யோகம்

குருவின் பார்வையால் யோகம்

குருபகவான் ஏப்ரல் மாதம் அதிசாரமாக கும்பம் ராசிக்கு செல்கிறார். கும்பத்தில் இருந்து உங்களின் ராசியை பார்வையிடுவதால் நல்ல யோகங்கள் தேடி வரும். திருமண யோகம் கை கூடி வரும். குருவின் பார்வை ஏப்ரல் மாதத்தில் இருந்து உங்கள் ராசிக்கு மூன்றாம் இடம் ஐந்தாம் இடங்களின் மீது விழுகிறது. இந்த குரு பார்வையால் பிள்ளைகளுக்கும் சுப காரியங்கள் நடைபெறும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம்

வியாபாரத்தில் லாபம்

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றிகள் தேடி வரும். வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மிதுனம் ராசிக்காரர்களுக்கு 2021ஆம் ஆண்டு ஆஞ்சநேயரை வழிபடவும். வியாழக்கிழமைகளில் வெற்றிலை மாற்றி ஆஞ்சநேயரை வணங்க அதிர்ஷ்டங்கள் தேடி வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+