ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021: குபேரனாகும் யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்
2021ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. துலாம் முதல் மீனம் வரையிலான ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யோகமும் அதிர்ஷ்டமும் தேடி வரும் என்று பார்க்கலாம்.
சென்னை: கொரோனாவின் பிடியில் உலகம் சிக்கியுள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து பல கோடி பேர் மீண்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டிலாவது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பார்களா? மக்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிறக்கப் போகும் புத்தாண்டிலாவது நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்குமா? வரும் ஆண்டிலாவது திருமணம் நடைபெறுமா என்று 90 கிட்ஸ் ஆதங்கத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை தருகிறது 2021 ஆங்கில புத்தாண்டு ராசி பலன். துலாம் ராசி முதல் மீனம் ராசி வரையிலான ராசிக்காரர்களில் பிறந்தவர்களுக்கு பிறக்கப் போகும் புத்தாண்டு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
புத்தாண்டு பலன் சொல்லும் போது நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்க்க வேண்டும். ஆண்டு கோள்கள் குரு, சனி, ராகு கேதுவின் சஞ்சாரம் எந்த ராசியில் இருக்கிறது என்று பார்த்து அந்த கிரகங்களின் சேர்க்கை பார்வை எப்படி இருக்கிறது எந்த ராசிக்கு கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும்.
2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை மார்கழி 17ஆம் தேதி பிறக்கிறது. மேஷம் ராசியில் செவ்வாய், ரிஷபம் ராசியில் ராகு, சந்திரன் கடகம் ராசியிலும் விருச்சிகம் ராசியில் கேது, சுக்கிரன், தனுசு ராசியில் சூரியன், புதன், மகரம் ராசியில் குரு, சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் படி துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்த எந்த ராசிக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் எந்த ராசிக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே , 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நான்காம் வீட்டில் குரு, சனி, இரண்டாம் வீட்டில் கேது எட்டாம் வீட்டில் ராகு என முக்கிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே உங்களுடைய ராசிக்கு அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டு வீடு, மனை வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வாங்கலாம். சுகங்கள் அதிகம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் வரலாம். பேச்சில் நிதானம் தேவை. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சக்தி பீடங்களுக்கு சென்று அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடலாம்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே 2021ஆம் உங்களுடைய ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மூன்றாம் வீட்டில் குரு, சனி, ராசிக்குள் கேது ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிப்பதால் நிறைய ஆன்மீக பயணம் செய்யலாம். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கோவில் கும்பாபிஷேம் உள்ளிட்ட தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரதோஷ காலங்களில் சிவபெருமானை சென்று வணங்குங்கள். அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனியும், குருவும் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு 12ஆம் வீட்டில் கேது, 6ஆம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளதால் ஜென்ம குரு, ஜென்ம சனி விலகி விட்டது. திருமணம் சுபகாரியங்கள் நடைபெறும், புதிய வேலை கிடைக்கும். பண வருமானம் அமோகமாக இருக்கும். சிக்கனமாக செலவு செய்யவும். நேரத்திற்கு எந்த செயலையும் சரியாக செய்யவும். பிறக்கப் போகும் புத்தாண்டு உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கப் போகிறது. மாணவர்களுக்கு மகிழ்சிகரமான ஆண்டாகும், பெண்களுக்கு பெருமை சேர்க்கக் கூடிய ஆண்டாகவும் அமையும். விநாயகப்பெருமானை வழிபடவும்.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்குள் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு லாப ஸ்தானத்தில் கேதுவும் ஐந்தாம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கின்றன. இந்த புத்தாண்டில் உங்களுக்கு ஜென்ம ராசியில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராசி அதிபதி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குரு, சனி பார்வையும் சாதகமாக உள்ளது. மன நிம்மதிக்காக நீங்கள் சனிபகவானை வணங்கி விளக்கேற்றுங்கள். அம்மன் கோவில்களில் பச்சரிசி தானம் செய்வது நல்லது.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீட்டில் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு பத்தாம் வீட்டில் கேதுவும் நான்காம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கின்றன. விரைய ஸ்தானத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் நிறைய வருமானமும் அதுபோல சுப விரைய செலவுகளும் ஏற்படும். வீடு, சொத்துக்கள் வாங்கலாம். வீட்டில் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். நல்ல விசயங்களுக்கு பணத்தை செலவு செய்யலாம். சிவ ஆலயங்களுக்கு சனிக்கிழமை சென்று வழிபடலாம். ராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி வில்வ அர்ச்சனை செய்வது நல்லது.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு ஒன்பதால் வீட்டில் கேதுவும், மூன்றாம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கின்றன. கொரோனா காலத்திலும் கோடீஸ்வரன் ஆகும் யோகம் உங்களுக்கு கை கூடி வந்துள்ளது. நவ கிரகங்களும் உங்களுடைய ராசிக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் ஆயுள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குபேரனாகும் யோகம் வந்துள்ளதால் வியாழக்கிழமைகளில் லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications