ஜனவரி மாத ராசி பலன்: மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்?
மாத ராசி பலன்: 2025 புத்தாண்டு புத்துணர்ச்சியுடன் பிறந்துள்ளது. ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த ஜோதிட கட்டுரையில் மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான ஜனவரி மாதத்துக்கான பலன்களை காணலாம்... (New year rasi palan 2025)
மகரம் ராசி (Magaram rasi palan): ஜனவரி மாதத்தின் தொடக்கமே உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும் காலமாக உள்ளது. உங்களுடைய லட்சியத்தை நோக்கி பயணிப்பீர்கள். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளை கடைப்பிடிப்பது நல்லது.

மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் தியானம், யோகம் செய்வது நல்லது. குடும்ப உறவுகளுக்குள் பாசிட்டிவான மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்துக்குள் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. நிதி விஷயங்களில் உங்கள் முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். அதிக தன்னம்பிக்கை அபாயத்தை தரும்.
கும்ப ராசி (Kumbam rasi palan): கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பல மாற்றங்களைத் தரும் மாதமாக இந்த மாதம் இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உங்கள் எண்ணங்களுக்குப் புதிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். நீண்டகால நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு உருவாகும். திறமை மற்றும் படைப்பாற்றலைக் காண்பிப்பதற்கான சரியான நேரம் அமையும். கலை அல்லது எழுத்து போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.
வணிகதில் உங்களுடைய உழைப்புக்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். அலுவலகம், வியாபாரம், தொழில் என அனைத்திலும் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். திறமைகளை வளர்த்துக் கொள்வது மற்றும் வேலை மாற்றம் போன்றவற்றுக்கு சிறந்த நேரமாக இருக்கும். உடன் பணியாற்றுபவர்களுடன் சுமூகமான சூழலில் இருப்பது நல்லது. உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். சரிவிகித ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வைத்துக் கொள்வது நல்லது.
மீனம் ராசி (Meenam rasi palan): மீன ராசியினருக்கு வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உங்களை பிரதிபலிக்கும் நேரம் அமையும். உங்களுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கான சிறந்த காலமாக இருக்கும். உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடனும், நண்பர்கள், உறவினர்களுடனும் நேரத்தை செலவிடுவீர்கள். அவர்களுடன் எதிர்காலம் குறித்து உரையாடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய யோசனைகள் மற்றும் பிறரை அணுகும் விதத்தை மாற்றியமைத்து வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள். உடற்பயிற்சி மற்றும் சீரான உணவுப் பழக்க வழக்கத்தை வைத்துக் கொள்வது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
-
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜூன் 16 2026 செவ்வாய்க்கிழமை -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Guru Peyarchi: மீனம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்! குருப்பெயர்ச்சி தரும் அசத்தல் பலன்கள் -
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications