Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி மாத ராசி பலன்: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

மாத ராசி பலன்: 2025 புத்தாண்டு புதிய நம்பிக்கைகளுடன் பிறந்துள்ளது. ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த தொகுப்பில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான ஜனவரி மாதத்துக்கான பலன்களை காணலாம்... (New year rasi palan 2025)

துலாம் ராசி (Thulam rasi palan): எதிலும் நேர்மையுடன் நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள் துலாம் ராசிக்காரர்கள். 2025 புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் இருந்தே உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். எதிர்மறை சிந்தனைகள் மறைந்து, நேர்மறை சிந்தனைகள் வலுவாகும். மாற்றத்துக்கான வழிகள் பிறக்கும். தொழில், குடும்ப வாழ்க்கை இரண்டுமே நன்றாக இருக்கும்.

rasi palan

சுற்றத்திலும், நட்பிலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அனைவரிடமும் இணக்கமான உறவை கடைபிடிப்பீர்கள். அதேநேரத்தில் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டிலும் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. உடற்பயிற்சி, யோகா செய்வதால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும்.

எந்த முடிவை எடுப்பதற்கு முன்பும் தீவிரமாக யோசிக்க வேண்டும். வணிகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இருப்பினும் அகலக்கால் வைத்தால் ஆபத்து நேரிடும். எனவே எதிலும் கலந்தாலோசித்து முடிவு செய்வது நல்லது. கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய மனஸ்தாபங்கள் நீங்கும். உறவுகளுடன் நீங்கள் செலவிடும் நேரம் மனதுக்கு உத்வேகத்தைத் தரும்.

விருச்சிகம் ராசி (Viruchiga rasi palan): உள்ளது உள்ளபடி மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுபவர்கள் விருச்சிகம் ராசிக்காரர்கள். இனம் புரியாத கவலைகளால் துவண்டு போயிருந்த உங்களுக்கு இந்த மாதம் வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை பல மடங்குகள் அதிகரிக்கும். சவால்கள் ஆங்காங்கே வந்தாலும் உங்களின் மன உறுதியால் இலக்குகளை கச்சிதமாக அடைவீர்கள்.

வீடு, மனை சொத்து வாங்குவதற்கான வழி பிறக்கும். உத்யோகத்தில் உடன் பணியாற்றுபவர்களின் ஆதரவு உதவியாக இருக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு இது சரியான நேரம். உங்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவதால் மனதில் உற்சாகம் பிறக்கும். உங்களின் அனைத்து முடிவுகளுக்கும் குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.

அதனால் உங்கள் வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசி முடிவு செய்யுங்கள். அது நல்ல முடிவுகளையே கொடுக்கும். இந்த மாதம் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். ஆங்காங்கே சின்ன சின்ன பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை நினைத்து கவலைப்படாமல் முன்னேறி சென்றால் வெற்றி கிடைப்பது உறுதி.

தனுசு ராசி (Dhanusu rasi palan): தன்னம்பிக்கைக்கும், கடின உழைப்புக்கும் பெயர் பெற்றவர்கள் தனுசு ராசிக்காரர்கள். ஜனவரி மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மனதில் உற்சாகம் பொங்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. நேர்மறையான சிந்தனைகளால் மற்றவர்களுக்கும் ஊக்கம் அளிப்பவர்களாக இருப்பீர்கள்.

இலக்குகளை தெளிவாக திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். எனவே தயக்கம் இல்லாமல் துணிந்து இறங்குங்கள். நீண்ட காலமாக திட்டமிட்டிருந்த காரியங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதற்கான சூழல் உருவாகும். உங்களின் முடிவு எடுக்கும் திறனுக்கு பாராட்டுகள் குவியும். சமூகத்தில் உங்களுக்கான செல்வாக்கு உயரும்.

நிதி சார்ந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். யாரையும் நம்பி முதலீடு செய்ய வேண்டாம். வீண் செலவுகளை தவிர்த்து பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு தன்னம்பிக்கையுடன் உங்கள் பாதையில் முன்னேறி செல்லுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+