லக்கி பாஸ்கர் மாதிரி.. சட்டென அடிக்கும் ஜாக்பாட்.. சிம்ம ராசி ஜாலியோ ஜாலி! 2025 புத்தாண்டு பலன்
சென்னை: 2025ம் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில்.. சிம்ம ராசி நேயர்களுக்கு என்ன நடக்கும் என்று பார்க்கலாம். வாழ்க்கையில் அவர்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்.. எங்கே முன்னேற்றம் ஏற்படும்.. எங்கே சரிவு ஏற்படும் என்று பார்க்கலாம்.
2025ம் ஆண்டு சாதாரண ஆண்டு கிடையாது. இந்த நூற்றாண்டின் கால்வாசியை எட்டும் ஆண்டும். ஜாதக, ஜோசிய ரீதியாக குரு, சனி பெயர்ச்சியில் ஒருவருக்கு வாழ்க்கையே புரட்டி போடும். 2025ம் ஆண்டு பல முக்கியமான நாட்களை கொண்ட வருடம் ஆகும். அந்த வகையில் சிம்ம ராசி நேயர்களுக்கு அடுத்த 1 வருடத்தில் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம் .

வாழ்க்கையில் மேம்படும் விஷயங்கள்:
சிறந்த ஆரோக்கியம்: நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகள் சரியாகும். உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் அடையும். நீரிழிவு அல்லது மூட்டு வலி போன்ற நாட்பட்ட பிரச்சனைகள் சரியாகும். மேலும் அறுவை சிகிச்சைகள் அல்லது சிகிச்சைகள் மூலம் முடங்கி இருந்தவர்கள் விரைவில் மீளும் வாய்ப்புகள் உள்ளன.
உறவு முறைகள் நெருக்கம் அடையும்: தனிமையில் இருப்பவர்கள் பொருத்தமான துணையைக் பெறுவீர்கள். திருமண உறவுகள் கைகூடும். தற்போதுள்ள உறவுகள் சிறந்த புரிதலையும் நல்லிணக்கத்தையும் காணும். அம்மா - அப்பா உடன் நல்ல நெருக்கம் ஏற்படும். பங்காளி சண்டை தீரும்.
தொழில் வளர்ச்சி: வேலை உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் உங்கள் தொழிலை பிரகாசமாக்கும். திறன்களை மேம்படுத்த, வேலை இடங்களை மாற்ற அல்லது வெளிநாட்டில் வேலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெளிநாட்டு வேலைக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
வீட்டு உரிமை: சொத்தில் முதலீடு செய்ய அல்லது உங்கள் கனவு வீட்டைக் கட்ட நல்ல நேரம் இது. வாடகைக்கு இருப்பவர்கள் தங்கள் சொந்த இடத்திற்கு மாறலாம்.
லாட்டரி அடிக்கும்: லக்கி பாஸ்கர் என்று சொல்லும் அளவுக்கு லாட்டரி அடிப்பது.. எஸ்ஐபியில் நல்ல ரிட்டர்ன் வருவது.. ஐபிஓவில் நல்ல ரிட்டர்ன் வருவது போன்ற வாய்ப்புகள் வரும்.
எதிர்பாராத நிதி ஆதாயங்கள்: திடீர் பணப் பலன்கள் - போனஸ், பரிசுகள் ஆகியவை உங்களை தேடி வரும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
கடன் அபாயங்கள்: கடன் வாங்க வேண்டாம். கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும். தேவையற்ற கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். குறிப்பாக முறைசாரா இடங்களில் இருந்து அல்லது அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக கடன் வாங்க வேண்டாம்.
சட்ட சிக்கல்கள்: சட்ட தகராறுகள், ஜாமீன் விஷயங்களில் தலையிடுவது வேண்டாம். நேர்மையாக இருங்கள் மற்றும் அனைத்து விஷயங்களிலும் ஆவணங்களை இருமுறை சரிபார்க்கவும்.
விபத்துகள்: பயணத்தின் போது கூடுதல் கவனம் தேவை. விபத்துகளைத் தடுக்க கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும்.
எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
காதல் விஷயங்களில் கவனம்: காதலில் ஈடுபடும் முன் கவனமாக சிந்தியுங்கள். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்கவும்.
மற்றவர்களுக்கு உதவுதல்: நிதி உதவி வழங்கும்போது கவனமாக இருங்கள். இது உங்களை கடனாளி ஆக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
முதலீட்டு முடிவுகள்: நம்பகமான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்க. அவசரப்பட வேண்டாம்.


Click it and Unblock the Notifications
