சனிப்பெயர்ச்சி 2025: துலாம் முதல் மீனம் வரை.. கிடைக்கும் பலன்கள் என்ன?
சனிப்பெயர்ச்சி: 2025 ஆங்கில புத்தாண்டும் பிறந்துவிட்டது. தை மாதமும் பிறந்துவிட்டது. இதனால் மக்கள் பலரும் பலவித எதிர்பார்ப்புகளுடன் இருப்பார்கள். இந்நிலையில் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி வருகிறது. இந்த சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் துலாம் முதல் மீனம் ராசிகளுக்கு ஏற்படக் கூடிய சாதக பாதகங்களை இங்கு பார்க்கலாம்.
துலாம்: துலாம் ராசிக்கு சனி ஆறாம் இடத்துக்கு வருவது மிகப்பெரிய யோகம் கிடைக்கப் போகிறது. தொட்டது துலங்கும். மற்ற கிரகங்களும் சாதகமான நிலையில் தான் உள்ளன. நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். பணியிடத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். எதிரிகள் சோர்வடைந்து விலகுவார்கள். மாணவர்களுக்கும் இந்த காலம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கு சனி ஐந்தாம் இடத்துக்கு வருகிறார். உங்களின் முயற்சிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். குருவின் நிலையும் சாதகமாக மாறவுள்ளது. குழந்தைகள் கல்வி, வேலை, திருமணம் காரணமாக சுப பிரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் - மனைவி மற்றும் காதல் உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணி மற்றும் தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள், முன்னேற்றங்கள் நிச்சயம் நிகழும்.
தனுசு: தனுசு ராசிக்கு சனி நான்காம் இடத்துக்கு வருகிறார். அதேபோல குரு மற்றும் ராகு கிரகங்களும் நல்ல நிலைக்கு பெயர்ச்சி ஆகவுள்ளன. சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருள்களை வாங்க வேண்டும். தொழிலில் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். தாயின் உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
மகரம்: மகரம் ராசிக்கு சனி மூன்றாம் இடத்துக்கு வருகிறார். ஏழரை சனி முற்றிலும் விலகப் போகிறது. இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கப் போகின்றன. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. கடன் சுமைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்: கும்பம் ராசிக்கு ஜென்ம சனி விலகப் போகிறது. அதனால் சோதனைகளில் இருந்து சற்று நிம்மதி கிடைக்கும். இளைஞர்களுக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்கும். காதல் - திருமணம் உறவு கைக்கூடும். மகிழ்ச்சிக்கு சற்றும் குறைவு இருக்காது. உங்களின் எல்லா முயற்சிகளும் படிப்படியாக நிறைவேறும். சொத்துகளால் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மீனம்: மீனம் ராசிக்கு ஜென்ம சனி வரப்போகிறது. அதனால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தொழிலில் லாபம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே மோதல் உருவாகும். இருப்பினும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உடல்நலனில் பிரச்னைகள் ஏற்படும். எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும். ஆண் - பெண் விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications