2025 தை மாத ராசி பலன்: பணத்தை மூட்டையில் அள்ளப் போகும் கடக ராசி.. இனி நீங்கதான் ராஜா
தை மாத ராசி பலன்: எடுத்த காரியங்களை தர்மத்தோடும், 100 சதவீத முயற்சியோடு செய்யக் கூடிய கடக ராசிக்காரர்கள் இந்த தை மாதத்தில் பெறப் போகும் பலன்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்... (Thai month rasi palan
கடக ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு இரண்டாம் பாவ அதிபதி தன குடும்ப வாக்காதிபதியாக இருக்கக் கூடியவர் ராசிக்கு ஏழாம் இடத்தில் போய் மகரத்தில் அமர்ந்திருக்கிறார். மகரத்தில் போய் அமர்ந்திருக்கும் சூரியன் உங்களுடைய ராசியை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஏழாம் இடத்தில் சூரியனும் புதனும் கண்டிப்பாக பெரிய குறைகள் எதுவும் ஏற்படாது.

அனுபவிக்க, வாழ்ந்து பார்க்க, பயணங்கள் செல்ல, வருமானத்தைப் பெருக்க, புதியன புகுதல் என்ற சொல்லக் கூடிய ஆடை, அணிகலன்களின் சேர்க்கை பெற்றுக் கொள்ள, வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். ஏற்கனவே வருமானம், தொழிலில் இருந்து வந்த தடைகள், சுணக்கங்கள் மறைந்து போகும். அனைத்து விஷயங்களிலுமே உங்களுக்கு அனுகூலமான நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. (Thai rasi palan for kadagam)
கடகத்திற்கு எட்டாம் இடத்தில் சனி இருக்கிறார். இந்த சனீஸ்வர பகவானை பார்த்து தான் சூரியன் நகர்ந்து கொண்டிருக்கிறார். இதனால், கடகத்துக்கு இருந்து வந்த தடை, தாமதங்கள் எல்லாம் உடைத்து எரியப்படும். அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டிய பணம், வரவு செலவுகள் குழப்பம், பிரச்னைகள், தகராறுகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சொத்து, தொழில் சம்பந்தமான வழக்குப் பிரச்னைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள்.
நீங்கள் நினைத்தது போல வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கடகத்திற்கு ராசிக்கு 12 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஐந்துக்கு உரியவர் மூன்றாம் இடத்தைப் பார்ப்பது என்பது உங்களுடைய உத்வேகம், முயற்சி, முன்னேற்றம் போன்றவற்றில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். (2025 kadaga rasi palan)
நினைத்ததை உடனே தர்மத்தோடு செய்யக் கூடிய குணம் பெற்றவர்கள் நீங்கள். உங்கள் குணத்திற்கேற்ப, உழைப்புக்கேற்ற பலன்களை அனுபவிக்கும் வகையில் கிரக சஞ்சாரங்கள் தெளிவாக உள்ளது. சூரியன் ராசியைப் பார்ப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தந்தையின் மூலம் வர வேண்டிய சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தீரும். மூத்தவர்கள் உங்களுக்கு பகையாளியாக இருந்தது போய், உறவாளிகளாக மாறுவார்கள்.
ஏழாம் இடத்தில் சூரியன் இருப்பதால் குடும்பம் மற்றும் கணவன், மனைவிக்கிடையே நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதுவரைக்கும் குடும்பத்தில் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் தை மாதத்தில் தீரும். புதன் ஏழாம் இடத்தில் இருப்பது தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பூமி, கட்டடம், காண்டிராக் தொடர்பான தொழில்களை செய்யக்கூடியவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
புதன் கேந்திரத்தில் அமருவதால் உறுதியாக உங்களது பிள்ளைகள் மூலமாக நல்ல தகவல்கள், முன்னேற்றதைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் நல்ல செய்தி வந்து சேரும். அஷ்டமத்து சனி கடந்து போகும் நிலையில் உள்ளது. ஆயுள் பாக்கியம், ஆரோக்கிய பாக்கியத்தில் குறைகள் இல்லை. வயிற்றுக் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள் போன்றவை குணமாகும்.
இரண்டாம் இடத்தை சனி பார்ப்பதால் பணப் பற்றாக்குறை சமாளித்துக் கொண்டே செல்லக் கூடிய சூழல் உருவாகும். 9 ஆம் இடத்தில் சுக்கிரன், ராகு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். யாரையும் நம்பி வாக்குறுதி கொடுப்பது, கையெழுத்து போடுவது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 11 ஆம் இடத்தில் வியாழன் அமர்ந்துள்ளது. வியாழனும், செவ்வாயும் 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும், நினைத்தது நிறைவேறும், கேட்டது கிடைக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளும் வாய்ப்புள்ளது.
சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலமாக யோகம் உண்டாகும். ஏழாம் இடத்தில் குரு பார்ப்பதால் கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் இருப்பதால் சாணாக்கியத் தனமாக அதனை கடந்து செல்வீர்கள். மொத்தத்தில் சிறந்த மாதமாக இந்த தை மாதம் இருக்கும், ஸ்ரீ வில்லிபுத்தூர், ஸ்ரீ ரங்கம் சென்று சுவாமி தரிசனம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications