Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2025 தை மாத ராசி பலன்: கும்பத்துக்கு பணம் கொட்டும்.. பட்ட கஷ்டத்தில் இருந்தெல்லாம் விடுதலை

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த தை மாதம் பல அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் மாதமாக அமையப் போகிறது. கும்ப ராசிக்காரர்கள் தை மாதத்தில் பெறப் போகும் நற்பலன்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்... (Thai month rasi palan) (Thai month rasi palan for Capricorn)

கும்ப ராசி நேயர்களுக்கு தை மாதம் மிக அருமையான மாதமாக இருக்கப் போகிறது. நினைத்ததை சாதிப்பீர்கள். நினைத்த இடங்களுக்குச் சென்று வருவீர்கள். நினைத்தபடி வாழ்வீர்கள். துன்ப துயரங்கள் விட்டுப்போனது என்று நம்பலாம். தேவைப்படுகிற பொருளாதார விருத்திகள் விரைவில் வரும். யாரென்று தெரியாதவர்களின் உதவிக்கரம் உங்களுக்கு கிடைக்கும்.

Thai month rasi palan Astrology

செய்து வருகின்ற காரியங்களில் பெயர், புகழ் கிடைக்கும். செய்த காரியத்தின் மூலமாக லாபம் கிடைக்கும். பொருளாதார அபிவிருத்திகள் உண்டாகும். புதிதாக எதாவது வாங்க வேண்டும் விற்க வேண்டும் என்றால் இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யலாம். பல கோணங்களில் கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த தை மாதம் மிகச் சிறப்பை தரக்கூடிய மாதமாக இருக்கும்.

ஏற்கனவே வெளியூர்கள், வெளிநாடுகள், வெளிமாநிலத்துக்குச் சென்றவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பட்ட கஷ்டங்களில் இருந்து எல்லாம் விடுதலை அடைவீர்கள். சூரியன் 7 ஆம் பாவ அதிபதியாக இருப்பதால் உங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார். நொந்துபோன மன நிலையில் இருந்து விடுபடுவதற்காக சூரியன் உங்கள் ராசியில் மறைந்திருக்கிறார். வெளிச்சமான சூழல் ஏற்படும். சனீஸ்வர பகவான் உங்கள் ராசிக்கு அதிபதியாகவே இருந்தாலும் உங்கள் ராசியில் வீற்றிருந்ததால் நீங்கள் பெரிதாக கஷ்டப்பட்டு வந்திருப்பீர்கள்.

சூரியன் ராசியை நோக்கி பயணிப்பதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், தங்க முதலீடு, பங்குச்சந்தை முதலீடு போன்றவற்றில் உங்களுக்கு வளர்ச்சி ஏற்படும். வர வேண்டிய பணம் உங்களைத் தேடி வரும். பொருளாதாரத்தை விருத்தி செய்யக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

கும்பத்துக்கு நான்காம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்தை குரு பார்ப்பதால் கோடி புண்ணியம் கிடைக்கும். மே மாதம் வரை நீங்கள் செய்கிற தொழில், வேலை, சொந்த தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சிகள் ஏற்படும். குறிப்பாக, ஆட்டு பண்ணை, கோழி பண்ணை, விவசாயம் போன்ற இயற்கை சார்ந்து தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

இரண்டாம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளதால் மனதுக்குள் புது தெம்பு ஏற்படும். வீரியத்துடன் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் எண்ண ஓட்டங்கள் வரும். 9 க்கு உடையவன் உச்சம் பெற்றிருப்பதால் அனைத்துவிதமான பிரச்னைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். அப்பாவின் உடல்நலப் பிரச்னைகள் அனைத்தும் தீரும். அவருடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும்.

சொந்த பந்தங்கள், யாரென்று தெரியாதவர்கள் மூலமாக நல்ல நிலைக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் இந்த தை மாதத்தில் உண்டு. ராசிக்கு 5 ஆம் இடத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் கண்டிப்பாக தொழிலில் பிள்ளைகளின் மூலமாக முன்னேற்றம் ஏற்படும். அதில் நல்ல வருமானம் வரும். இதே குரு பகவான் 12 ஆம் இடத்தை பார்ப்பதால் கணித சம்பந்தப்பட்ட துறை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும்.

பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு தேடி வரும். இப்படி சகல சம்பத்துகளும் பெற்று இந்த தை மாதம் மகிழ்ச்சி தரக்கூடியதாக உங்களுக்கு இருக்கும். மலைக் கோயில்களுக்குச் சென்று சுவாமி வழிபாடு செய்வது உங்களுக்கு சிறப்பான பலனைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+