2025 தை மாத ராசி பலன்: தொழில், பணம், புகழால் ஜொலிக்கப் போகும் மீன ராசி.. இதில் மட்டும் கவனம் தேவை
தை மாத ராசி பலன்: மீன ராசிக்காரர்களுக்கு தை மாதம் சிறப்பான மாதமாக இருக்கப் போகிறது. இருந்தாலும் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மீன ராசிக்காரர்கள் தை மாதத்தில் பெறப் போகும் நற்பலன்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்... (Thai month rasi palan)
மீன ராசிக்காரர்களுக்கு தை மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். 6 ஆம் பாவ அதிபதியாக இருக்கக்கூடிய சூரியன் 11 ஆம் இடத்தில் அமர்வதாலும், ஐந்தாம் இடத்தை பார்ப்பதாலும் பெருமையாக, புகழோடு கூடிய நல்ல முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். சிவன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். வீட்டிற்குள் சுப செய்திகள், சுப காரியங்கள் குறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

இதுவரை வணங்கி வந்த கடவுள், தெய்வத்தின் அருள் அடையாளப்படுத்தப்படும். நிறைய பேருக்கு 11 ஆம் இடத்தில் சூரியன் இருப்பது இயற்கை வரம் கொடுக்கும் என்று சொல்வார்கள். சூரிய பகவான் அந்த அளவுக்கு நல்ல பலனைத் தரப் போகிறார். இதுவரை காசு, பணம் தொடர்பாக இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் தீரும். யாரை எல்லாம் நம்ப முடியவில்லை என்று வருத்தப்பட்டீர்களோ அவர்கள் மூலமாக நல்லது நடக்கும். (Thai month rasi palan for Pisces)
மன அளவில் மாற்றங்கள் நிகழும். நிறைய விஷயங்களை உங்கள் பாதையில் புரிந்து கொள்ளப் போகிறீர்கள். இளம்பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். நல்ல தெளிவாக யோசிக்க ஆரம்பிப்பார்கள். ஐந்தாம் இடத்தை சூரியன் பார்ப்பது அதாவது புதனும், சூரியனும் இணைந்து பார்ப்பதால் கல்லூரி மாணவர்கள், உயர்கல்வி கற்கச் சென்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல அனுகூலம் உண்டாகும்.
அனைத்துவிதமான வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். பிள்ளைகள் மூலமாக மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். வியாதிகள் குணமாகும். சில குடும்பத்தில் சுபகாரியங்கள் பேசுவதற்கான வாய்ப்பு ஏற்படும். 11 ஆம் இடத்திற்கும், மூன்றாம் இடத்திற்கும் இரண்டு கிரகங்கள் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதால் இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வீடு மாற்றம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
உழைப்பில் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி, குடும்ப உறவுகளிடையே மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதிகள் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடுகளில் தொழிலுக்காக பிரிந்து சென்ற குடும்பங்கள் நாட்டுக்குத் திரும்பி வந்து சேரும் வாய்ப்புகள் உண்டு. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை நீங்கள் உணரும் மாதமாக இந்த மாதம் அமையும்.
வயதான மீன ராசிக்காரர்களுக்கு முழங்கால் வலி, நரம்பு சம்பந்தப்பட்ட தொல்லைகள், தோல் அலர்ஜி, மன அழுத்தங்கள் போன்றவை வரும் வாய்ப்புள்ளது. ஒருபக்கம் ஏழரை சனி நடந்து கொண்டிருந்தாலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெரிய ஆபத்தை தராது. நீங்கள் செய்கின்ற தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். முன்னேற்றங்கள் உண்டாகும்.
சொந்த ஊரை விட்டு வெளியில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும். உங்க ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால் உங்களுடைய உறவுகள் மத்தியில் மதிப்பை பெறுவீர்கள். குரு பகவான் ராசிநாதனாக இருந்து 9 ஆம் இடத்தை பார்ப்பதால் பணப் பிரச்னைகள் வராது. சொந்த தொழில் செய்பவர்கள், எரிபொருள் தொழில், ஏஜென்சி, டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில் செய்பவர்கள் இந்த மாதத்தில் நல்ல முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண்பீர்கள்.
செவ்வாய் ஏழாம் இடத்தை பார்ப்பதால் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை போக்கு நிலவும், பத்தாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் நல்ல தொழில் தொடங்கும் வாய்ப்புள்ளது. பள்ளி, புத்தகம், பிரிண்டிங் துறையில் இருப்பவர்களுக்கு மீனத்தில் பிறந்தவர்களுக்கு நம்பிக்கை தரும் மாதமாக இருக்கும். முருகன் ஆலயங்களுக்குச் சென்று வருவது நல்ல பலனைத் தரும். சுவாதி நட்சத்திரத்தன்று லட்சுமி பூஜை செய்வது பொருளாதார சிக்கல்களைத் தீர்க்கும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications