2025 தை மாத ராசிபலன்: விருச்சிக ராசிக்கு அடிச்சது லாட்டரி.. கிடைக்கும் நற்பலன்கள் என்ன தெரியுமா?
தை மாத ராசி பலன்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் உச்சத்தில் இருப்பதால் பலவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். விருச்சிக ராசிக்காரர்கள் இந்த தை மாதத்தில் பெறப் போகும் நற்பலன்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்... (Thai month rasi palan)
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தை மாதம் பத்தாம் பாவ அதிபதியாக இருக்கக் கூடிய தொழில் கிரகமாகத் திகழும் காலபூஷனுக்கு ஐந்துக்குடையவனாக உங்கள் ராசிக்கு யோகத்தை தரக்கூடிய சூரிய பகவான் இப்போது ராசிக்கு மூன்றாம் இடத்தில் வீற்றிருக்கிறார். 3, 6, 10, 11 ஆம் இடத்தில் சூரியன் இருப்பது அந்த குறிப்பிட்ட ராசியினருக்கு தெய்வ கடாட்சத்தையும், இறைவனுடைய அனுகூலத்தையும், சிவகடாட்சத்தையும் பரிபூரணமான வளர்ச்சி உங்களுக்கு உண்டாகும். (Thai month rasi palan for Viruchigam)

மூன்றாம் இடத்தில் சூரியனும், புதனும் இருப்பது உங்கள் மனதுக்குள் இருக்கும் குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். யாரிடம் என்ன பேச வேண்டும், எதைச் செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக முடிவெடுப்பீர்கள். மூன்றாம் இடத்தில் சூரியன் இருப்பதால் உங்களைவிட வயதில் குறைவாக இருப்பவர்கள் மூலமாக உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
அரசாங்கத்தின் மூலமாக ஆதாயம் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு விருத்திகள் உண்டாகும். குறிப்பாக, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யக் கூடியவர்கள், தொழிற்சாலைகள், இயந்திரம் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சிலருக்கு கண், காது, மூக்கு துவாரங்கள் தொடர்பான வியாதிகள் உண்டாகும். ஜீரணக் கோளாறு, குடல் வியாதிகள் வருவதற்கான வாய்ப்புண்டு.
நிறைய பேருக்கு தொழிலை மாற்றுவது, வேறு இடத்திற்கு வேலைக்குச் செல்வது போன்ற மாற்றங்கள், உயர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. புதிய ஊர்களில், புதிய மக்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அனுகூலமான காலமாக இருக்கும். அஷ்டாமதிபதி மூன்றாம் இடத்தில் மறைவதால் கேட்டது கிடைக்கும். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். அறிவை சார்ந்து வேலை செய்பவர்களுக்கு தைரிய வீரிய பராக்கிரமத்தால் அடுத்த நிலைக்குச் செல்வீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
நான்காம் இடத்தில் சனி பகவான் சூரியனுக்கு இரண்டாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் வீடு புனரமைப்பு பணிகள், வீடுகள் மாறுவது, வீட்டுக்குத் தேவையான புதிய பொருள்கள் வாங்குவது போன்ற நன்மைகள் ஏற்படும். சில குடும்பங்களில் வயதான தாய்மார்கள் இருந்தால் கால், கைகளில் ஏதாவது வலி இருந்தால் அதற்கு மருத்துவம் பார்த்துக் கொள்வது நல்லது. வாத வியாதிகளின் மூலமாக தேவையற்ற மன பாரம் சார்ந்த பிரச்னைகள் வரும்.
7 ஆம் பாவ அதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரனும், 5 ஆம் பாவ அதிபதியாக இருக்கக்கூடிய குரு பகவானும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் வீட்டுக்குள் கணவன், மனைவி, குடும்ப உறவுகளிடையே மாற்றம், சந்தோஷம், முன்னேற்றம் ஏற்படும். தாங்கள் பெற்றிருக்கக்கூடிய பிள்ளைகள் வாயிலாக வரும் சந்தோஷம், பிள்ளைகளுக்கு அலங்காரம் செய்வது, முதலீடுகளைக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள்.
ராசிநாதன் 8 ஆம் இடத்தில் அமர்ந்து இரண்டாம் இடத்தை பார்ப்பதால் பண வரவுகள் உண்டாகும். கடன் பட்டாவது காரியத்தை பரிபூரணப்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். எதோ ஒரு நல்ல விஷயத்தை செய்து பெயர், புகழை தக்க வைத்துக் கொள்வீர்கள். பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
அநேக அனுகூலன்களைச் செய்யும் மாதமாக இந்த தை மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இருக்கும். பக்கத்தில் இருக்கக்கூடிய முருகன் கோயில்களில் தரிசனம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications