2026 புத்தாண்டில் டாப் கிளாஸ் யோகம் பெறும் 4 ராசிகள்
2026 புத்தாண்டு பலன்கள்: 2026 புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு சில நாட்களே உள்ளது. 2025 வருடம் எதிர்பார்க்காத பல டிவிஸ்ட்கள் நடந்துள்ளன.இயற்கை சீற்றங்கள், தங்கம், வெள்ளி விலை உயர்வு, அரசியல் திருப்பங்கள் ஆகியவற்றை கண்டுள்ளோம். பலருக்கு எதிர்பார்த்த விஷயங்கள் நடந்திருக்கும். பலருக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்திருக்காது. இதனால் 2026 புதிய வருடத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 2026 ஆம் ஆண்டில் அற்புதமான பலன்களை பெற போகும் 4 ராசிகளை இதில் காணலாம்.
2025 வருடத்தின் இறுதியில் இருக்கிறோம். இன்னும் ஒரு வாரத்தில் 2026 புத்தாண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளோம். இந்த வருடம் பல முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகவும், பல நல்ல விஷயங்களை எதிர்பார்த்தும் அனைவரும் காத்திருக்கிறது. 2026 வருடத்தின் பொது பலன்கள், எந்தெந்த துறைகளில் வளர்ச்சி எப்படி இருக்கும். இதில் அதிர்ஷ்டங்களை பெறப் போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

2026 புத்தாண்டு சந்திரனில் பிறக்கிறது. கடந்த 2025 ஆம் வருடத்தை போலவே பெண்கள் அதிகம் வெற்றி பெறுவார்கள். மழை நன்றாக பெய்து, விவசாயம் செழிக்கும். கடக ராசியில் குரு உச்சம் பெற போகிறார். 12 ராசியில் குரு கன்னி, மீனம், கடகம் ராசிகளில் தான் அவர் பலமடைவார். அதனால் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.
மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியலில் பெரும் மாற்றங்கள் இருக்கும். கூட்டணியில் சிறப்பாக செயல்படுவோர் வெற்றியை காண்பார்கள். தமிழ்நாடு கடக ராசியாகும். கடகத்தில் குரு உச்சம் பெறுகிறார். அதனால் தமிழ்நாட்டிற்கு 2026 மிகவும் நன்றாக இருக்கும். கோயில் நிகழ்வுகள், கட்சி கூட்டங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏப்ரல் மாதம் பிறக்க போகும் தமிழ் வருடம் யுவ வருடம். விமானத்துறையில் சர்ச்சைகள் இருக்கும். கிழக்கத்திய தேசியங்களில் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும். இந்தமுறை சென்னையில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகள் இருக்காது. சித்த வைத்தியத்தில் பெரிய முன்னேற்றம் இருக்கும்.இந்தியாவில் புதிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், புரட்சிகள் இருக்கும்.
ராணுவ தளவாடங்கள், புதிய போர் விமானங்களில் முன்னேற்றம் ஏற்படும். இந்த வருடத்தில் நிறைய நல்லதுகள், கெட்டதுகள் எல்லாமே இருக்கும். 2026 ஆம் வருடத்தில் கன்னி ராசி டாப்பாக இருக்கும்.
கன்னி ராசிக்கு எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கும். ராசியில் இருந்து கேது பகவான் விலகவுள்ளார். கடகம் ராசிக்கு குரு பகவான் பலமடைவதால் அந்த ராசிக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குரு பகவான் விருச்சிகம், மகரம் :ராசிகள் மீது நேரடியாக விழுவதால் அந்த ராசிகளுக்கும் இந்த வருடம் நன்றாக இருக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications