Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராவதே சந்தேகமா – ஜாதக்கத்தில் உள்ள 2 சிக்கல்

Subscribe to Oneindia Tamil

2026 புத்தாண்டு பலன்கள்: 2026 புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்க போகிறது. புதிய ஆண்டில் பல நல்ல விஷயங்களுக்காக எதிர்நோக்கி காத்திருப்போம். இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசியலில் இது முக்கியத்துவம் வாய்ந்த வருடம்.

ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுகவும் தீவிரம் காட்டுகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். 2026 தேர்தல் அவருக்கு எப்படி இருக்கும், அவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.

2026-newyear-will-edappadi-palanisamy-win-in-assembly-election-here-is-jathagam-prediction

2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. இந்த தேர்தல் அதிமுகவுக்கு எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமை பதவியை ஏற்றார். கட்சியில் தனக்கான அதிகாரத்தை போராடி பெற்றுவிட்டார். இப்போதும் அதிமுகவில் உள்கட்சி பிரச்சனைகள் தீரவில்லை.

எடப்பாடி பழனிசாமி ஜாதகம்

ஆனால் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பல ஈரோடு கிழக்கு மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறவில்லை. இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தன்னுடைய ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு கன்னி ராசி. 2026 வருடம் முழுவதும் ராகு பகவான் அவரின் ராசிக்கு 6 ஆம் இடத்தில் பயணிக்க போகிறார். இது அவருக்கு மிகப்பெரிய பலம். அதேநேரத்தில் தற்போது அவருக்கு கண்டக சனி நடைபெற்று வருவதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏழாம் இடத்தில் சனி பகவான் இடத்தில் இருக்கிறார். அவர் வியூகங்களை சரியாக வகுக்க வேண்டும்.

கேதுவால் சிக்கல்

12 ஆம் இடத்தில் உள்ள கேது பகவான் வியூகங்கள் வகுப்பதில் தாமதம் அல்லது சிக்கல்களை ஏற்படுத்தும். பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்தால் பிறகு தேர்தலின்போது சிரமாகும். காரணம் ஏற்கனவே சற்று அதிக காலம் எடுத்துவிட்டது. கண்ணை மூடி திறப்பதற்குள் தேர்தல் வெகு வேகமாக முடிந்துவிடும். அதனால் தேர்தல் வியூகங்களை தெளிவாக, விரைவாக எடுக்க வேண்டும்.

முக்கியமாக இதில் யாரையும் நம்பி இருக்க கூடாது. தேர்தல் வியூகங்கள், முடிவுகளில் அவர் நேரடியாக இருக்க வேண்டும். கூட்டணி விவகாரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசிக்குள் அவர் கூட்டணியில் விரைந்து சரியான முடிவை எடுக்க வேண்டும். கட்சி யாரையும் நம்பி, அவராக இறங்கி சந்தித்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கன்னி ராசிக்கு அவர்களாக நேரடியாக இறங்கினால் எதிலும் சாதிக்க முடியும்.

எதிர்க்கட்சி தலைவராவதே சந்தேகம்

மற்றவர்களை நம்பி அலட்சியமாக இருந்தால் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் ஆவது கூட சிரமமாகி விடும். அவராக நேரடியாக இறங்கி செயல்படும்போது அதிர்ஷ்டம் கிடைக்கும். அவருக்கு 10 ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதையும் மறந்துவிடக் கூடாது. பதவி வருவது போன்ற தோற்றத்தை உருவாக்கி, பிறகு அதை வரவிடாமல் செய்துவிடும்.

சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அவருக்கு 11 ஆம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். அது மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும். அப்போதைய லாபத்தை அனுபவிக்க இப்போதிருந்தே அவர் பல விஷயங்களில் இறங்கி செயல்பட வேண்டும். அப்படி செய்தால் அவர் வெற்றிகரமான அரசியல்வாதியாக தொடர்வார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+