2026 உதயநிதி ஸ்டாலினுக்கு புரோமோஷனா.. பின்னடைவா.. ஜாதகம் சொல்வது என்ன
2026 புத்தாண்டு பலன்கள்: 2026 புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்க போகிறது. புதிய ஆண்டில் பல நல்ல விஷயங்களுக்காக எதிர்நோக்கியிருப்போம். இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசியலில் இது முக்கியத்துவம் வாய்ந்த வருடம். ஆளுங்கட்சியான திமுகவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சியின் எதிர்கால தலைவராக முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். 2026-ம் வருடம் அவருக்கு எப்படி இருக்கிறது என்பதை உதயநிதி ஜாதகத்தின் மூலம் கணிக்கப்பட்ட பதிவை இங்கே காணலாம்.
உதயநிதி ஸ்டாலின் 27.11.1977-ம் ஆண்டு பிறந்துள்ளார். கும்ப லக்னம். சந்திரன் கேந்திரத்தில் இருப்பது ஒருவகையில் நன்மை. சனி திசை சுக்கிர புத்தி நடந்தபோது உதயநிதி துணை முதலமைச்சரானார். 9.11.2022 முதல் 9.11.2026 வரை உதயநிதிக்கு சுக்கிர புத்தி நடக்கிறது. குரு பார்வையும் நன்றாக உள்ளது. தந்தை ஸ்தானமான சூரியன் பலமாக உள்ளது.

சுக்கிர திசையால் லாபம்
ஒன்பதாம் இடம் என்பது சுக்கிரன். அதனால் தான் தந்தை மூலமாக சுக்கிர திசை காலத்தில் உதயநிதி துணை முதலமைச்சரானார். 9.1.2026 வரை உதயநிதிக்கு நேரம் நன்றாக இருக்கிறது. அதன்பிறகு அவருக்கு சூரிய புத்தி தொடங்குகிறது. அவரின் லக்னத்திற்கு சூரியன் ஏழாம் அதிபதிக்கு பலம் நன்றாக இருக்கிறது.
உதயநிதி திமுக தலைவராக வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கும் சூழல் உள்ளது. லக்னாதிபதியாக இருந்தாலும் அவர் சனியை தொடர்பு கொள்ள கூடாது. ஸ்டாலினுக்கு அந்த அமைப்புதான் உள்ளது. உதயநிதிக்கு லக்னாதிபதி சனியுடன் தொடர்பில் இருப்பது நல்ல அமைப்பு கிடையாது.
லக்னாதிபதி செக்
உதயநிதியின் லக்னாதிபதி தனக்கு பிடிக்காத பகை வீட்டில் இருக்கிறார். சந்திரன் தன் பகை வீடான சூரியன் வீட்டில் இருக்க கூடாது. அது யோகத்தை செய்யாது. இதனால் மிகப்பெரிய பதவி கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். முக்கியமாக சொல்லப்போனால் முதலமைச்சர் பதவியை அவ்வளவு எளிதில் அடைந்துவிட முடியாது.
9.1.2026 முதல் 22.12.2026 வரை அவருக்கு சூரிய திசை நடக்கிறது. அந்த காலத்தில் அவரை அரசியலில் முன்னிலைப்படுத்தும் போது, அது முதலமைச்சர் என்ற பதவியை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுத்தலாம். அதேநேரத்தில் கட்சியில் உதயநிதியின் தாக்கம் பெரியளவுக்கு இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதையே அவரின் ஜாதக கட்டங்கள் சொல்கின்றன.
-
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications