செவ்வாய் வக்ர நிவர்த்தியால் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. பணம், தொழிலில் அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் வக்ர நிவர்த்தி: பிப்ரவரி 24 ஆம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தையும், இடத்தையும் மாற்றுகின்றன. கிரகங்களின் இயக்க மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியால் உருவாகும் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படும். இந்த கிரக மாற்றங்கள் சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும்.

rasi palan

செவ்வாய்ப பகவான் மேஷம், விருச்சிக ராசிகளின் அதிபதியாகும். செவ்வாய் பகவான் ராசியையும் நட்சத்திரத்தையும் மாற்றுவதுடன், செவ்வாய் வக்ரம் மற்றும் நேர்கதியில் பயணிக்கிறது. செவ்வாய் கிரகத்தின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகம் நேர்கதியில் இருக்கும்.

செவ்வாய் நேர்கதியில் இருப்பதால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. செவ்வாய் கிரகம் டிசம்பர் 7, 2024 அன்று காலை 5:01 மணிக்கு வக்ர கதியில் பயணிக்கத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 24 ஆம் தேதி காலையில் 7:27 மணிக்கு நேர்கதியில் பயணிக்கத் தொடங்கும். செவ்வாய் வக்ர நிவர்த்தியில் நேர்கதியில் பயணிப்பதால் நற்பலன்களை அனுபவிக்கும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மேஷம் - செவ்வாய் வக்ர நிவர்த்தியில் நேர்கதியில் பயணிப்பது மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களை அள்ளித் தரும். வியாபாரம், சொந்த தொழில் செய்பவரக்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் மன அமைதி உண்டாகும். சொந்தமாக கடை நடத்துபவர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டகால முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான நல்ல நேரமாக இருக்கும்.

துலாம் - செவ்வாய் நேர்கதியில் பயணிப்பது துலாம் ராசிக்காரர்களுக்கு யோக பலன்களை தரும். நடுத்தர வயதினருக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்டகாலமாக நோயால் துன்பப்பட்டு வந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். உடல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை அடைவீர்கள். தொழில் செய்யும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் முன்னேறுவதற்கான சூழல் உருவாகும். மனதில் தைரியமும், மகிழ்ச்சியும் உண்டாகும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பொருளாதார சூழ்நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். காதலில் இருப்பவர்கள் மற்றும் கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நேர்கதியில் பயணிப்பது சாதகமான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும். புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதன் மூலம் நல்ல சம்பள உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி பெருகும். உங்களுடைய நேரத்தை குடும்பத்துடன் செலவிடுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+