தனுசுவில் சனி, குரு கேது கூடவே சூரியன், சந்திரன் புதன் - டிசம்பர் 25ல் என்ன நடக்கும்
நவகிரகங்களில் ஆறு கிரகங்கள் வரும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று ஒரே ராசியில் சேருகின்றன. தனுசு ராசியில் சனி, கேது, குரு, சூரியன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்களின் கூட்டணியால் சாதகமா? பாதகமா? என்று பார்க்
சென்னை: இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25 முதல் 27 ஆம் தேதி வரை ஜோதிடவியலில் மிக முக்கியமான சம்பவம் நிகழப்போகிறது. அதாவது தனுசு ராசியில் ஏற்கனவே சனி, கேது கிரகங்கள் இணைந்துள்ளன. நவம்பர் முதல் குரு தனுசு ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். கூடவே டிசம்பர் மாதம் சூரியன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் கூட்டணி சேர்ந்து மொத்தம் ஆறு கிரகங்கள் இணைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு வரும் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
நவகிரகங்கள் 12 ராசியில் ஏதாவது ஒரு மாதத்தில் சஞ்சரிக்கின்றன. சந்திரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும் சூரியன் மாதம் ஒருமுறையும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்கின்றன. குரு ஆண்டுக்கு ஒருமுறையும், சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ராகு கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இடப்பெயர்ச்சி அடைகின்றன.
இந்த ஆண்டு இறுதி வரை தனுசு ராசியில் சனி, கேது, குரு சஞ்சரிக்கின்றன. இந்த சூழ்நிலையில்தான் ராஜகிரகங்கள் சூரியன், சந்திரன், புதன் தனுசுவில் இணையப்போகின்றன. இதனால் பூமியில் ஏதேனும் ஆபத்து நடக்குமோ, சுனாமி போன்ற பாதிப்பு எதுவும் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் அவ்வாறு அச்சப்பட தேவையில்லை என்பதே ஜோதிடர்கள் கருத்து.

6 கிரகங்கள் கூட்டணி
ஒரு ராசியில் இப்படி ஆறு கிரகங்கள் இணைவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். இந்த ஆண்டு அது நிகழப்போகிறது. இது
நிச்சயமாக நல்ல தாக்கம்தான். தனுசு ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கப் போகிறது என்பதன் அறிகுறி.

நல்லதே நடக்கும்
தனுசு ராசி தனுசு லக்னம் கால புருஷனுக்கு ஒன்பதாம் வீடு. பாக்ய ஸ்தானத்தில் டிசம்பர் 25 இரவு முதல் 27 இரவு வரை 6 கிரகங்கள் இணைந்து சஞ்சரிக்கின்றன. தந்தை கிரகமான சூரியன், தாய் கிரகமான சந்திரன், உழைப்பு கிரகமான ஆயுள்காரகன் சனி , அறிவு கிரகமான புதன், ஞானகாரகன் கேது கூடவே குருவும் இணைவது ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியே நடக்கும். நிறைய நல்ல விசயங்கள் நடக்கும்.

முயற்சியில் வெற்றி
தனுசு ராசி தனுசு லக்னகாரர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய யோகம் கிடைக்கப் போகிறது. தடைபட்டு வந்த திருமணம் நடக்கும். அற்புதமான யோகம். நல்ல விசயங்கள் நிறைய நடக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். முயற்சி செய்யுங்க நடக்கும்.

வெற்றிகள் அதிகரிக்கும்
கர்மகாரகன் சனியோடு சேர்ந்து குரு சேர்ந்து இருக்கின்றனர். சனி குருவோடு சேரும் கேது அபரிமிதான நன்மையை தரும். வெற்றிகரமானதாகவே நடக்கும். ஞானத்தை கொடுக்கும் தனுசு ஞான வீடு. நல்லதே நடக்கும் 2020ஆம் ஆண்டு வரை தொடரும். ஆன்மீக வாழ்க்கை அதிகரிக்கும்.எல்லாருக்கும் நல்லது நடக்கும்.

5 தலைமுறைக்கு புண்ணியம்
அன்றைய தினம் கோவிலுக்கு சென்றால் 5 நூற்றாண்டுகள் கோவிலுக்கு போன பலன் கிடைக்கும். ஐந்து தலைமுறைக்கான புண்ணியம் கிடைக்கும். மேஷ லக்னத்திற்கு ஒன்பதாம் வீடு. அன்றைய தினம் கோவிலுக்கு போனால் நல்ல பலன் கிடைக்கும். சிம்ம லக்னகாரர்கள் கோவிலுக்கு போனால் பிள்ளைகளுக்கு நல்லது நடக்கும் குழந்தைகள் நலமாக இருப்பார்கள்.

கோவிலுக்கு போங்க
மிதுனம் லக்னகாரர்கள் ராசிக்காரர்கள் கோவிலுக்கு சென்றால் நல்லது நடக்கும் திருமண தடை நீங்கும். தனுசு ராசி உயிர்ப்போடு இருக்கும். கன்னி லக்னகாரர்கள் கோவிலுக்கு போக மன நிறைவு கிடைக்கும். உங்க சக்திக்கு ஏற்ப தானம் பண்ணுங்க. மீனம் லக்னகாரர்கள் கோவிலுக்கு போக அபரிமிதமான பலன் கிடைக்கும். செய்யும் தொழில் வளர்ச்சியடையும்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications