மேஷ ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. சொத்துகள், நகைகளை குவிக்கும் நேரம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு விசேஷமான இந்த அற்புதமான மாதத்தில் கடக ராசிக்குள் சூரியன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. கடக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதம் இது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு விசேஷமான மாதமாகும். கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ வழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலாகலமாக இருக்கும். ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரையிலான ஆடி மாதத்தில் மேஷம் ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து காணலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு தாய் மற்றும் தந்தையின் வழியிலான உறவுகள் மேம்படும். பசு மாடுகளுக்கு தானம் கொடுப்பது நன்மை ஏற்படுத்தும். குலதெய்வத்தின் வழிபாடு மிகவும் அவசியமானதாகும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. மற்றவர்கள் எது பேசினாலும் அதனை கேட்டு கோபப்படாமல் தள்ளி நிற்பது நல்லது.
சொத்து சேர்க்கை
அசையும், அசையா பொருள்களின் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் அனுகூலமும், ஆதாயமும் கேட்படும். சுப விரையங்கள் உண்டாகும். வாகனத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆன்மீகப் பயணம், குருமார்க்கள் தரிசனம் செய்வது போன்ற எண்ணங்கள் உண்டாகும்.
நிலம், தொழில்
கலைநிகழ்ச்சிகளில் செல்லக்கூடிய யோகம் உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வது தன்னம்பிக்கையும், தைரியத்தையும் ஏற்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கைகூடி வரும். புதிய தொழில் தொடங்குவதற்கு நல்ல காலகட்டம். வேலை செய்து கொண்டிருப்பவர்கள் தனித்தொழில் தொடங்குவீர்கள்.
சுபகாரியம்
சுப காரியத்தில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். சுப காரியங்களுக்கான ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களுக்குப் பிடித்த நிலம், இடம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடிப்பெருக்கில் முதலீடு செய்வது அனுகூலத்தை தரும். ஆடி மாதம் நல்ல காரியத்தை செய்யக் கூடாது என்பது இல்லை. மிகவும் நல்ல மாதம். குறிப்பாக, ஆடிப் பெருக்கில் முதலீடு செய்தால் பெருக்கமடையும்.
பண வரவு
பண வரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து பண வரவு உண்டாகும். லாட்டரி, பங்குச்சந்தை போன்ற விஷயங்களில் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பிரச்சனைகள் விலகும்
இந்த மாதம் முழுவதும், உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பண வரவு சிறப்பாக இருக்கும். உத்யோகம், தொழிலில் ஏற்றம் இருக்கும். நிலம், வீடு வாங்குவார்கள். சொத்தில் இருந்த சட்ட சிக்கல்கள், பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.
-
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications