Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி மாத பலன் 2025: ஆடி மாதம் எப்படி இருக்கிறது?.. மேஷம் – கன்னி 6 ராசிகளுக்கான பலன்கள் முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத பலன்கள்: ஆனி மாதம் நிறைவடைந்து இன்று ஆடி மாதம் தொடங்கியுள்ளது. பொதுவாக ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு விஷேசமானது. ஊர்களில் ஆங்காங்கே கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழா கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ பழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலகலமாக இருக்கும். 17.7.25 - 18.8.25 வரையிலான ஆடி மாதத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகள் பெற கூடிய பலன்களை காணலாம்.

ஆடி மாதம் இன்று (17.7.25) தொடங்கியுள்ளது. ஆடி மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதி மிகவும் முக்கியம். இந்த வருடம் ஆடி 1 ஆம் தேதி வியாழக் கிழமையும், 5 ஆம் தேதி திங்கள் கிழமையும் அமைந்துள்ளன. இதனால் உலகளவு மழையின் தாக்கம், வெள்ள பாதிப்பு அதிகம் இருக்கும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் பெரிய இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தீ மற்றும் காற்றினாலும் அதிக பாதிப்புகள் இருக்கும்.

Aadi Month Lucky Zodiac signs

போர் மேகம்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் இன்னும் மோசமடைவதற்கு வாய்ப்புள்ளது. வரி சுமையால் மக்கள் சிரமப்படுவார்கள். விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு நன்றாக இருக்கும். பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ பூச்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆடி மாதத்தில் சூரிய பகவான் கடக ராசிக்குள் பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

ஆடி நிகழ்ச்சிகள்

ஆடி மாதம் அஷ்ட லட்சுமி கடாசம் கொண்டுள்ளது. ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடைபெறவுள்ளன. கடவுளின் ஆசி பரிபூரணமாக நிறைந்ததது தான் ஆடி மாதம். ஆடி மாதத்தில் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகள் பெறக் கூடிய பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

மேஷம்

மேஷ ராசிக்கு இந்த மாதம் முழுவதும், உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பண வரவு சிறப்பாக இருக்கும். உத்யோகம், தொழிலில் ஏற்றம் இருக்கும். நிலம், வீடு வாங்குவார்கள். சொத்தில் இருந்த சட்ட சிக்கல்கள், பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே இருக்கிறார். சந்திரன் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் நல்ல செய்திகள் நடைபெறும். சுப காரியங்கள் நடக்கும். தொட்டது துலங்கி எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். உத்யோகம், தொழிலில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. மனதில் அமைதி நிலவும்.

மிதுனம்

மிதுன ராசிக்கு உங்கள் ராசிநாதன் புதன் ராசியிலேயே வக்கிர நிலையில் உள்ளார். ராசிநாதன் வலுவிழந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அவ்வபோது பிரச்சனைகள் வந்து செல்லும். குரு பகவானும் ராசியில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் சூரியன் இருக்கிறார். உத்யோகம், தொழிலில் இட மாற்றம் நிகழும். எல்லாவற்றிலும் நன்மை பெருகும். திருமண தடை நீங்கி திருமண யோகம் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும்.

கடகம்

கடக ராசிக்கு 8 ஆம் இடத்தில் சனி, இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருக்கின்றனர். விரயம் அதிகமாக இருக்கும். எல்லாவற்றிலும் போராட்டமும் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் தொல்லைகள் உருவாகும். நண்பர்கள், பகைவர்கள், உறவினர்கள், சொத்துகள் எல்லாவற்றிலும் பிரச்னைகள் இருக்கும். செவ்வாய் பெயர்ச்சி ஆனப்பிறகு (ஆடி 12) நல்ல பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். உத்யோகம், தொழிலில் மாற்றங்கள் நிகழ்ந்து மனதில் சற்று நிம்மதி ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு ராசியிலேயே செவ்வாய், 7 ஆம் இடத்தில் சனி பகவான் இருக்கின்றனர். இதன் காரணமாக ஏராளமான பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். இந்த மாதம் அதெல்லாம் பறந்து நல்ல பலன்கள் கிடைக்க போகின்றன. லாபம் நன்றாக இருக்கும். அதேநேரத்தில் விரயமும் இருக்கும். உத்யோத்தில் புதிய பொறுப்புகள், அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும்.

கன்னி

கன்னி ராசிக்கு குரு பகவான் 10 ஆம் இடத்திலும், ஆடி 12 ஆம் தேதி செவ்வாய் உங்கள் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பெரிய விரயம் இருக்கும். அதை சுப செலவாக மாற்றுவது புத்திசாலித்தனம். தொழிலுக்காக புதிய கடன்கள் கிடைக்கும். தொழில் சிறப்பாக இருக்கும். திருமண விவகாரத்து பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+