ஆடியில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி.. எதிர்பாராத அதிர்ஷ்டம் நிச்சயம்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு விசேஷமான இந்த அற்புதமான மாதத்தில் கன்னி ராசிக்குள் சூரியன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. கடக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதம் இது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு விஷேசமான மாதமாகும். கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ வழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலாகலமாக இருக்கும். ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரையிலான ஆடி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து காணலாம்.

aadi-matha-palan-2025-viruchigam-scorpio-rasi-people-will-get-good-benefits-during-this-aadi-mont

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள பெற்றோர், பெரியோரின் தேக ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆடி அமாவாசை தினத்தன்று பசு மாடுகளுக்கு உணவளிப்பது நல்லது. ஆடி மாதத்தில் ஏழைப் பெண்களுக்கு உணவு தானமாக கொடுப்பது, சேலை தானமாக கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். வெள்ளிக்கிழமைகளில் இஷட தெய்வம், குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் நல்ல மேன்மைகளும், முன்னேற்றமும் உண்டாகும்.

ஆரோக்கியம்

துணையின் தேக ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும். கால் வலி, முதுகு வலி, கால்சியம், வைட்டமின் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். சாப்பிடுவது பிடிக்கவில்லை என்ற நிலை ஏற்படும். பெற்றோர் பெரியவர்களின் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ஏற்றம்

தொலைதூரத்தில் இருந்தாலும் பெற்றோர்களுடன் போனில் பேசுவது நல்லது. இல்லையெனில் பின்னால் வருத்தப்படும் சூழ்நிலை வருவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் மிகப்பெரிய ஏற்றங்கள் ஏற்படும். ஆடி மாதம் முடிந்த பின்னர் திடீர் ஏற்றம் ஆவணியில் ஏற்படும். அதற்கான அறிகுறிகள் கண்டிப்பாக காணப்படும்.

திடீர் அதிர்ஷ்டம்

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். லாட்டரி மூலமாக உங்களுக்குப் பணம் வரும். 4 ஆம் வீட்டில் ராகு இருப்பதால் பிரம்மாண்டமான சிந்தனை ஓட்டங்கள் உண்டாகும். ஆடம்பரமாக, பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். பெரிய வீடுகள் கட்டும் எண்ணம், வாங்கும் எண்ணம் வரும். வீடு பற்றிய சிந்தனை இல்லாதவர்கள்கூட இனி வீட்டைப் பற்றி சிந்திப்பீர்கள். மாற்றங்கள் அனைத்தும் உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.

பண வரவு

10 ஆம் இடத்தில் செவ்வாய் வலுவாக உள்ளதால் ஆடி மாதம் முழுவதும் உங்களுக்கு நல்லதை கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். ஆடி மாதம் 12 ஆம் தேதிக்குப் பிறகு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு செல்வதால் வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேறு இடங்களுக்கு மாற்றலாகிச் செல்வது போன்ற அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். ஆடி மாதம் 10 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன், குரு 8 இல் அமர்வதால் பொருளாதாரத்தில் எந்த குறையும் இருக்காது. ஆனால், கணவன், மனைவிக்கு இடையே அந்நியோன்ய குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+