Aadi Matha Rasi Palan 2021: ஆடி மாத ராசி பலன் - மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு அற்புதம்
ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால் கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.ஆடி மாதம் தட்சிணாயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதத்தில் மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்ற
சென்னை: ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால் கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆடி மாதம் தட்சிணாயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு திசையில் பயணம் செய்வார். சூரியனின் தென்திசை பயணம் தொடங்குவதை நாம் தட்சிணாயண புண்ணிய காலம் என்று சொல்கிறோம். ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி பிறக்கப் போகிறது. ஆகஸ்ட் 16ஆம் தேதி வரைக்கும் ஆடி மாதம் உள்ளது. இந்த மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கூழ் ஊற்றி அம்மனை வணங்குவார்கள். விஷ்ணு சயன ஏகாதசி, ஆடிப்பூரம், ஸ்வர்ண கவுரி விரதம், குரு பூர்ணிமா,ஆடி கிருத்திகை, ஆடி 18ஆம் பெருக்கு, நாக பஞ்சமி, கருட பஞ்சமி, கருடாழ்வார் ஜெயந்தி, பானு சப்தமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
ஆடி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கடக ராசியில் சூரியன், செவ்வாய் சிம்ம ராசியில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது மகர ராசியில் சனி, கும்ப ராசியில் குரு, ரிஷபத்தில் ராகு, மிதுன ராசியில் புதன் என கிரகங்கள் பயணிக்கின்றன. ஆடி 4ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். 9 ஆம் தேதி புதன் கடக ராசியில் பயணம் செய்கிறார். 23ஆம் தேதி சிம்ம ராசிக்கு புதன் மாறுகிறார். ஆடி 26ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மகரம், கும்பம், மீன ஆகிய 3 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படியிருக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தொட்டது பொன்னாகும்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதத்தில் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். ராசியில் சனி, இரண்டாம் வீட்டில் குரு, ஐந்தாம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் புதன், ஏழாம் வீட்டில் செவ்வாய்,சூரியன், எட்டில் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. லாப ஸ்தானத்தில் கேது வார துவக்கத்தில் ஏழாம் வீட்டில் செவ்வாய் சூரியன் இணைந்து சஞ்சரிப்பதால் திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும் சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும்.கௌவரம் அந்தஸ்து அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தொழில் அபிவிருத்தி ஏற்படும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். தொட்டதெல்லாம் பொன்னாகும்.

விழிப்புணர்வு அவசியம்
நீண்ட நாட்களுக்கு காணாமல் போன விலை உயர்ந்த பொருட்களை கண்டுபிடிப்பீர்கள். ஆரம்பித்த வேலைகள் பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடைபெற வாய்ப்புள்ளது. எட்டாம் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்வதால் நகை, பணத்தை பத்திரப்படுத்த வேண்டும். அதே போல செவ்வாய் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு இடம் மாறுவதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். கால்வலி பிரச்சினைகள், அடி வயிறு வலி பிரச்சினைகள் தொடர்பாக மருத்துவ செலவுகள் வரும்.

பண வரவு அற்புதம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே ஆடி மாதத்தில் உங்கள் ராசிக்கு பல அற்புதங்கள் நிகழப்போகிறது. உங்கள் ராசிக்குள் குரு, நான்காம் வீட்டில் ராகு, ஐந்தாம் வீட்டில் புதன் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சூரியனின் பயணம் தொடங்குகிறது. ஏழாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய், பத்தாம் வீட்டில் கேது, விரைய ஸ்தானத்தில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இந்த மாதத்தில் உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும் கடன் பிரச்சினைகள் நீங்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் வரும்.

வெற்றிகள் தேடி வரும்
தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீடு கட்டும் விசயமாக பேசி முடிவு செய்யலாம். சிலர் வீடு கட்ட வாஸ்து செய்யலாம். அரசு வேலைக்காக முயற்சி செய்ய ஏற்ற மாதம். கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. பேச்சில் கடுமை காட்ட வேண்டாம் வீட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பொறுப்பும், கடமையும் அதிகரிக்கும். உங்களுடைய திட்டங்களை அதிக அளவில் வெளியில் சொல்ல வேண்டாம். வெற்றி பெறும் வரைக்கும் கவனமும் விழிப்புணர்வும் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த மாதத்தில் ஆடி அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்வது நன்மையை அதிகரிக்கும்.

பண வரவு அதிகரிக்கும்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, நான்காம் வீட்டில் புதன், ஐந்தில் சூரியன், செவ்வாய், ஆறில் சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் கேது, லாப ஸ்தானத்தில் சனி, விரைய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. ஐஸ்வர்யங்கள் அதிகரிக்கப்போகிறது. திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

நினைத்தது நிறைவேறும்
அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல மாதம். முக்கியமான பைல்களில் கையெழுத்து போடும் போது கவனமும் விழிப்புணர்வும் அவசியம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெண்களுக்கு நகை, ஆடை சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளுக்கு உயர்கல்வி விசயமாக செலவு செய்வீர்கள். வேலையில் புரமோசன் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நினைத்த காரியம் நிறைவேறும். இந்த மாதத்தில் உடல் நலத்தில் சில பாதிப்புகள் வரலாம் கவனமும் நிதானமும் தேவை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications