Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aadi Matha Rasi Palan 2021: ஆடி மாத ராசி பலன் - இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண புழக்கம் அதிகரிக்கும்

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால் கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.ஆடி மாதம் தட்சிணாயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிற

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால் கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆடி மாதம் தட்சிணாயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு திசையில் பயணம் செய்வார். சூரியனின் தென்திசை பயணம் தொடங்குவதை நாம் தட்சிணாயண புண்ணிய காலம் என்று சொல்கிறோம். ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி பிறக்கப் போகிறது. ஆகஸ்ட் 16ஆம் தேதி வரைக்கும் ஆடி மாதம் உள்ளது. இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கூழ் ஊற்றி அம்மனை வணங்குவார்கள். விஷ்ணு சயன ஏகாதசி, ஆடிப்பூரம், ஸ்வர்ண கவுரி விரதம், குரு பூர்ணிமா,ஆடி கிருத்திகை, ஆடி 18ஆம் பெருக்கு, நாக பஞ்சமி, கருட பஞ்சமி, கருடாழ்வார் ஜெயந்தி, பானு சப்தமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

ஆடி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கடக ராசியில் சூரியன், செவ்வாய் சிம்ம ராசியில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது மகர ராசியில் சனி, கும்ப ராசியில் குரு, ரிஷபத்தில் ராகு, மிதுன ராசியில் புதன் என கிரகங்கள் பயணிக்கின்றன. ஆடி 4ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். 9 ஆம் தேதி புதன் கடக ராசியில் பயணம் செய்கிறார். 23ஆம் தேதி சிம்ம ராசிக்கு புதன் மாறுகிறார். ஆடி 26ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படியிருக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

லாபமான மாதம்

லாபமான மாதம்

சுக்கிரபகவானை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இந்த மாதம் பத்தாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். நன்மைகள் அதிகம் நிறைந்த மாதம். புதிய பதவிகள் தேடி வரும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் சுக்கிரன் லாப ஸ்தானத்திலும் இணைந்து பயணிப்பதால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். அப்பாவின் பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சுப காரியங்கள்

சுப காரியங்கள்

நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் தேடி வரும் வீட்டில் விஷேசம் நடைபெறுவதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. சொத்து வாங்கலாம். வீடு கட்டுவதற்கான வாஸ்து செய்யலாம். சுப காரியங்கள் செய்வதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. புதிய வரவுகள் கை கூடி வரும். நிம்மதியும் சந்தோஷமும் தேடி வரும். நண்பர்கள் உதவியால் சந்தோஷ நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவி உறவில் அந்நியோன்னியம் அதிகரிக்கும். ஆடி அமாவாசை நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.

முன்னேற்றமான மாதம்

முன்னேற்றமான மாதம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, பாக்ய ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் முன்னோர்களின் சொத்துக்கள் கை கூடி வரும். கடவுள் அனுக்கிரகமும் முன்னோர்களின் அனுக்கிரகமும் சேர்ந்து கிடைக்கப் போகிறது. பத்தாம் வீட்டில் சுக்கிரன் செவ்வாய் இணைந்திருப்பதால் புதிய வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாற்றமும் முன்னேற்றமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

வேலை மாற்றம்

வேலை மாற்றம்

திருமணம் சுப காரியம் தொடர்பாக பேச முயற்சி செய்யலாம். வேலையில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நன்மையைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதுவும் நரம்பு தொடர்பான பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. இளைய சகோதரரின் உதவிகள் கிடைக்கும். நன்மைகள் நடைபெற ஆடி வெள்ளியில் அம்மன் வழிபாடு செய்வது நன்மையைக் கொடுக்கும்.

காரிய வெற்றி

காரிய வெற்றி

வீடு வாகனம் சொத்துக்கள் வாங்க கடன் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். சூரியன் எட்டில் பயணிப்பதால் வேகத்தை குறைத்து விவேகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வாகன பராமரிப்பு தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். நவ கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் பயணம் செய்வதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். காணாமல் போன விலை உயர்ந்த பொருள் உங்களுக்குக் கிடைக்கும்.

சந்தோஷமான மாதம்

சந்தோஷமான மாதம்

நினைத்த காரியம் நிறைவேறும். எந்த காரியத்தையும் திட்டமிட்டு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து தொடங்குங்கள் வெற்றிகள் கிடைக்கும். கோபமான பேச்சுக்களைத் தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கால்வழி பிரச்சினைகள் வரும் கவனம் தேவை. சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்க நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+