Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி மாத ராசி பலன் 2022..சூரியனின் ராசி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன யோகம்

ஆடி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியைப் பொருத்து மேஷம் முதல் கன்னி ராசி வரை பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால் கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆடி மாதம் தட்சிணாயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. தை முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கிப் பயணம் செய்வார். இது உத்தராயண புண்ணியகாலம் ஆகும். ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு திசையில் பயணம் செய்வார். சூரியனின் தென்திசைப் பயணம் தொடங்குவதை நாம் தட்சிணாயண புண்ணிய காலம் என்று சொல்கிறோம். ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி பிறக்கிறது. ஆகஸ்ட் 16ஆம் தேதி வரைக்கும் ஆடி மாதம் உள்ளது. இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு என்ன யோக பலன் என்பதை பார்ப்போம்.

ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கூழ் ஊற்றி அம்மனை வணங்குவார்கள்.
விஷ்ணு சயன ஏகாதசி, ஆடிப்பூரம், ஸ்வர்ண கவுரி விரதம், குரு பூர்ணிமா,ஆடிக் கிருத்திகை, ஆடிப் 18ஆம் பெருக்கு, நாக பஞ்சமி, கருட பஞ்சமி, கருடாழ்வார் ஜெயந்தி, ஆடி கிருத்திகை பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். ஆனி 32 ஆம் தேதி மிதுன ராசியிலிருந்து சூரியன் கடக ராசிக்கு இடம் பெயர்ந்தார்.ரிஷப ராசியில் இருந்த புதன் ஆனி 32 ஆம் தேதி கடக ராசியில் அமர்ந்தார். பின்னர் ஆடி 15 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். மிதுன ராசியில் நிற்கும் சுக்கிரன் 21ம் தேதி கடக ராசிக்குச் செல்கிறார்.
மேஷ ராசியில் இருக்கும் செவ்வாய் 25ஆம் தேதி ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். சனி வக்ர கதியில் மகர ராசியில் இருக்கிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

 மேஷம்

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
கடல் கடந்து பயணம் செல்வீர்கள். வியாபாரத்தில் சில பிரச்சனைகளைச் சந்தித்த நீங்கள் இந்த மாத மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள். போட்ட முதலுக்கு பாதகமில்லாமல் வருமானம் வரும். வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும். கலகலப்பான பேச்சு வார்த்தையால் உறவினர்களை ஒன்று சேர்ப்பீர்கள். குருபகவான் வக்ரகதியில் பின்னோக்கி நகர்ந்தாலும் நல்லதையே செய்வார். மனம் விட்டுப் பேசி குடும்பத்திலிருந்த சிக்கலைத் தீர்ப்பீர்கள். அரசுப் பணியாளர்கள் திறமையாக வேலை பார்ப்பார்கள். வாகன விற்பனை அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் போடுவீர்கள். போட்டி பந்தயங்கள் சாதகமாக அமையும். ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள். திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள். தடை இல்லாமல் காரியங்கள் நடக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே.... தொழிலை எப்படி நடத்தப் போகிறோம் என்று மனம் பேதலித்தீர்கள். நல்ல நண்பர்களின் ஆலோசனையால் சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். மனையிடம் வாங்கி மகளுக்குக் கொடுப்பீர்கள். சிலர் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் மேற்கொள்வார்கள். ஏதாவது ஒரு எதிர்ப்பு தொழிலுக்குத் தோன்றும். புத்திசாலித்தனத்தால் அதை முறியடிப்பீர்கள். வெளிநாட்டிலிருந்து பண உதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவார்கள். பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சகோதரர்கள் சலசலப்பை உண்டாக்குவார்கள். வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.கையிருப்பு கணிசமாக உயரும். திருத்தணி முருகனை வழிபட்டால் திருப்தி உண்டாகும்.

Recommended Video

    மிதுன ராசிக்கு இடம்பெயர்ந்த சுக்கிரன் | 12 ராசிகளுக்கான பலன்கள்
    மிதுனம்

    மிதுனம்

    எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
    மற்றவர்களை மட்டம் தட்ட நினைக்காதீர்கள். மேலிடம் சொல்வதைக் கண்ணை மூடிக்கொண்டு கேளுங்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியம் நடக்கும். குடும்பத்தில் ஏதாவது சில்லறைச் சண்டை தோன்றும். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். பகைவர்கள் தொல்லை நீங்கும். இனிமையாகப் பேசி வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். பார்ட்னர்களிடம் பக்குவமாக நடந்து அனுசரித்துச் செல்லுங்கள். பணத்தைக் கையாளும் போது கவனம் தேவை. கணவன் மனைவியிடையே உறவு திருப்திகரமாக இருக்கும். எந்த ஒரு காரியமும் சுலபமாக நடக்கும். கற்பக விநாயகரை கை தொழுது நில்லுங்கள். காரியசித்தி உண்டாகும்.

    கடகம்

    கடகம்

    வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
    அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். கையில் வாங்கிய காசு பையில் போடும் முன் மாயமாகும். இந்த மாத பிற்பகுதியில் தொட்ட காரியங்கள் வெற்றியடையும். வீட்டு மனைகளைத் தாராளமாக வாங்கலாம். பங்குச்சந்தை உங்களுக்குச் சாதகமான நிலையில் உள்ளது. வெளியூர்ப் பயணங்களால் தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். நெருங்கிய நண்பருக்கு உதவி செய்வீர்கள். மனைவி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாளை வழிபடுங்கள். திருப்பங்கள் உண்டாகும்.

    சிம்மம்

    சிம்மம்

    அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
    உத்தியோகத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். சேமிக்கும் பழக்கம் பெண்களுக்கு அதிகரிக்கும். கூடுதலான பணிச்சுமை வந்து சேரும். வாகனங்கள் வாங்கி விற்பதன் மூலம் நல்ல லாபம் பார்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகள் புகழ் அடைவார்கள். இலக்கியவாதிகளுக்குப் பாராட்டும் பெருமையும் கிடைக்கும். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைத்து பணிச்சுமை கூடும். இனிமையாகப் பேசி வாடிக்கையாளர்களை இழுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டிகள் உருவாகலாம். வைத்தீஸ்வரனை வழிபடுங்கள். வியாபார விருத்தி உண்டாகும்.

    கன்னி

    கன்னி

    அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
    வாக்கு வன்மையால் வழக்குகளை பேசித் தீர்ப்பீர்கள். அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். மேலதிகாரிகள் கொடுக்கும் வேலையை தட்டாமல் செய்து நன்மதிப்பு பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். பழைய பாக்கிகளை அக்கறையோடு வசூல் செய்வீர்கள். அரசாங்க ஊழியர்கள் நேர்மையாகப் பணியாற்றி பொதுமக்களின் வாழ்த்தைப் பெறுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். இரும்பு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டும். ஒத்தக்கடை யோக நரசிம்ம பெருமாளை வழிபடுங்கள். நோய் நொடிகள் விலகும்.


    உங்கள் ஜோதிடர் கவிஞர்
    அ.பெர்னாட்ஷா, காரைக்குடி..

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+