ஆடி மாத ராசி பலன் 2023: கடக ராசியில் சூரிய பெயர்ச்சி.. புதன் கூட்டணி.. குபேர யோகம் யாருக்கு?
சென்னை: தமிழ் மாதங்களில் 4வது மாதம் ஆடி மாதம், இந்த மாதத்தில் சூரியன் கடகம் ராசியில் பயணம் செய்கிறார். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் ஆன்மீக மாதமான ஆடி மாதத்தில் மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு கிடைக்கப்போகும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம் : வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். படிப்பில் மேன்மை நிலை உண்டாகும், வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். கல்வி கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும்.

ரிஷபம் : வேலையில் இடம் மாற்றம் உண்டாகும், பயணங்களால் நன்மை ஏற்படும். தகவல் தொடர்பு சிறப்படையும், மனதில் குதுகலம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள், சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப விரைய செலவுகள் வரும். பணத்தை பத்திரப்படுத்துங்கள்.
மிதுனம் : வேலை செய்யும் இடத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரம் தூள் பறக்கும். தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும், திடீர் என்று பணம் கிடைக்கும். நீண்ட நாட்கள் கிடைக்காமல் பாக்கி இருந்த பணம் வசூலாகும், சமயோசிதமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பெண்களால் நன்மை உண்டாகும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை விசயமாக பிரயாணம் செய்யும் நிலை உண்டாகும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.
கடகம் : வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். உறவினர்களினால் நன்மை உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் தாய் மாமனால் நன்மை உண்டாகும், புத்திக் கூர்மை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கடன் வாங்கும் நிலை உண்டாகும்.வேலை தொழிலில் புதிய முன்னேற்றம் ஏற்படும். பத்தாம் இடத்தில் பயணம் செய்யும் ராகு புதிய பதவி யோகத்தை தரப்போகிறார்.
சிம்மம் : சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் பயணம் செய்கிறார். உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். சகோதரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும், ஷேர் மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். பொழுது போக்கு விஷயங்களில் கவனம் தேவை. பரம்பரை விவசாய நிலம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
கன்னி : சூரியன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் காலத்தில் அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும், மூத்த சகோதரருடன் சண்டை சச்சரவு வந்து நீங்கும். புதியதாக வீடு நிலம் வாங்குவீர்கள், உறவினர் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் நினைப்பவை எல்லாம் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும். மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் நிச்சயமாகும். இந்த மாதத்தில் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications