ஆடி மாத ராசி பலன் 2023: சூரிய பெயர்ச்சி.. புதாத்திய யோகம்.. பண மழையில் நனையும் ராசிக்காரர்கள்
சென்னை: தமிழ் மாதங்களில் 4வது மாதம் ஆடி மாதம், இந்த மாதத்தில் சூரியன் கடகம் ராசியில் பயணம் செய்கிறார். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் ஆன்மீக மாதமான ஆடி மாதத்தில் துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

துலாம் : சூரியன் பத்தாமிடத்தில் பயணம் செய்யும் இந்த மாதத்தில் அரசாங்க வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், தொழில் நிலை சிறப்படையும். ஷேர் மார்க்கெட் தொழில் சிறப்படையும், முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடையே நல்ல பெயர் கிடைக்கும். பெண்களுக்கு தங்க நகை சேர்க்கை அதிகரிக்கும். மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும்.
விருச்சிகம் : சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்து கிடைக்கும், பரம்பரையாக செய்துவந்த தொழில் சிறப்படையும். நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை, மாணவர்களுக்கு உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும், வியாபாரம் விருத்தியடையும். குழந்தைகளின் படிப்பு செலவுகள் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு கரையும் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்களில் சிறப்பு உண்டாகும். அம்மாவின் உடன் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு : சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம், செயல்களில் நிதானமும் கவனமும் தேவைப்படும். கோபமான பேச்சுகளை தவிர்க்கவும், வீட்டு வாடகை மூலம் வருமானம் உண்டாகும். வேலை தொழிலில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பண வரவும் சரளமாக இருக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும்.
மகரம் : தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் சிறப்படையும், அடிக்கடி நீண்ட தூர பயணம் செல்லும் நிலை உண்டாகும். மனதில் கோபம் அதிகரிக்கும். பயணங்களில் நிதானமும் கவனமும் தேவை. சில்லறை வியாபாரம் சிறப்படையும், தாய் மாமனால் நன்மை உண்டாகும். எல்லா செயல்களும் வெற்றியடையும், வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். விலை உயர்ந்த நகை, பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். மன சஞ்சலங்கள் நீங்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
கும்பம் : உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். முயற்சி செய்தால் புதிய வேலை கிடைக்கும். தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை, வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும், ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். பண வரவு அதிகரிக்கும், கடவுள் அனுக்கிரகம் துணை நிற்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும், திடீர் ஜாக்பாட் மூலம் பண வரவு வரும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும், மன ஆசைகள் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
மீனம் : சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்து பிரச்சினை நீங்கும். அப்பாவினால் ஆதாயம் உண்டாகும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும், ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் கிடைக்கும், பேச்சில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் கடன் வாங்கும் நிலை உண்டாகும், வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற சிரமப்படுவீர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications