ஆடி மாத ராசி பலன்: மேஷம் - மீனம் வரை 12 ராசிக்கும் என்ன பலன்?.. தொழில், பணம், ஆரோக்கியம் முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத ராசி பலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் இன்று பிறந்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.

ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர்.

aadi-month-zodiac-sign-what-kind-of-benefits-will-get-mesham-to-meenam-rasi-people-in-this-period

சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு நிறைய தெய்வ காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கோபத்தை தவிர்ப்பது நல்லது. இந்த ஆடி மாதத்தில் அசைவத்தை தவிர்த்து சைவத்தை சாப்பிடுவது நல்லது. அல்லது திங்கள்கிழமை தோறும் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது அற்புதமான ஏற்றத்தையும், வெற்றியையும் ஏற்படுத்தும்.

தாய், தந்தை உறவுகளுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நிறைய நன்மைகளை ஏற்படுத்தும். தாயுடன் தகராறு வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ரத்தத்தில் பரவும் தொற்று நோய்களில் அதீத கவனம் தேவை. அங்காளம்மன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைத் தரும்.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு உறவுகள் தொடர்பான விஷயத்தில் வெற்றிகள் ஏற்படும். லாபம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். தொழிலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஆடி மாதத்தில் பூமி பூஜை போடுவதற்கான யோகம் உண்டாகும். புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். உள்ளூர், வெளியூர், வெளிநாடு பயணம், கடல் கடந்து பயணம், தொழில் நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் அனுகூலம் ஏற்படும். ஏற்றங்கள் நிறைந்த காலகட்டம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு உங்களுக்கு சகலவித முன்னேற்றத்தையும் தரும். லட்சுமி ஸ்தோத்திரம் கேட்பது நன்மையைத் தரும்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசியினர் பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாமே சரி செய்யும் அமைப்பு உள்ளது. மற்றவர்களிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வார்த்தைகளில் அனுகூலம் ஏற்படும்.

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அற்புதமான ஏற்றம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த கஷ்டங்கள் தீரும். உத்தியோகம், வியாபாரம், தொழிலில் ஏற்றம் ஏற்படும். அடுத்தடுத்து நிறைய நன்மைகள் நடக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

போனில் சண்டை போடுவது, கத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சைபர் பிரச்சனைகள் வரும் என்பதால் கவனம் தேவை. படபடப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த தெய்வத்தை வழிபட்டாலும் வராஹி அம்மனை நினைத்து வழிபாடு செய்வது நல்லது. வராஹி மந்திரம் தினந்தோறும் செல்வது ஏற்றத்தைத் தரும்.

கடக ராசி பலன்

கடக ராசியினருக்கு அரசுத் துறையில் தேவையில்லாத தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடனிருப்பவர்கள் விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. மேலதிகாரிகளிடம் மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாத வம்புகள், பிரச்சனைகள் வரும் என்பதால் எச்சரிக்கை தேவை.

2 ஆம் அதிபதி ராசியிலும், உடன் குருவும் இருப்பதால் இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் போன்றவை ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். முதுகு, கழுத்து, சுழுக்கு, நரம்பு போன்ற விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம். பிரஷர் ஏறாமலும், குறை ரத்த அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துர்க்கை வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு நிறைய விரயங்கள் ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் பதட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும். பொறுமையாக இருப்பதை கடைப்பிடிப்பது நிறைய நன்மைகளை ஏற்படுத்தும். உணர்ச்சிவசப்படுவது, ஆவசேப்படுவதை தவிர்ப்பது நல்லது. உறவுகளை புதுப்பித்துக் கொள்வது நல்லது. தாயார், தந்தை நிறைய உதவிகளை உங்களுக்கு செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

கடனை நினைத்து யோசித்துக் கொண்டே இருப்பதை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக அதற்கு தீர்வு கிடைக்கும். அஷ்டமத்தில் இருக்கும் சனி வக்கிர சனியாக இருப்பதால் குடும்பத்தில் உள்ள உறவுகள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். கணவன்மார் உறவினர்களிடம் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

காதல் அமைப்பில் அனுகூலம் காணப்படும். ஆனால் திருமண உறவில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சூளினியாக நினைத்து எல்லா தெய்வங்களையும் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினருக்கு லாபம், அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணை விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். வெளியிடத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் நல்ல அனுகூலம் காணப்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.

நீண்ட நாட்களாக இருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். அற்புதம், ஆனந்தமும் ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொழிலில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வீர்கள். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும் நல்ல அமைப்பு உள்ளது. ஜாயிண்டுகளில் ஏற்படும் வலிகளில் கவனம் தேவை. கன்னி ராசியினருக்கு பிரித்யுங்கரா வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக நிறைய முன்னேற்றங்கள் கிடைக்கும். புதிய தொழில், புதிய உத்தியோகம், புதிய வியாபாரம் கிடைக்கும். பண விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். புதிய முதலாளிகள் கிடைப்பார்கள். மேலதிகாரிகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த சங்கடங்கள் தீரும்.

வியாபாரத்தில் நிறைய யோக பலன்கள் கிடைக்கும். குடும்பத்திலும், வெளியிடத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். எல்லா கஷ்டங்களும், சங்கடங்களும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் வழிபாடு, அம்பாளுக்கு கைங்கரியம் செய்வது, அன்னதானம் செய்வது ஏற்றத்தை தரும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசியினர் சோம்பலைத் தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். துணையிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். தொழில் ரீதியாக காணப்பட்டிருந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

அக்கம்பக்கத்தில் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பயணங்களின்போது புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கவனம் தேவை. வங்கிகளுக்குச் சென்றுவிட்டு வருபவர்கள், விலை உயர்ந்த பொருள்களை கையாள்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் நன்மை கிடைக்கும். புதன்கிழமை தோறும் பெருமாள், தாயார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

மகாலட்சுமிக்கு தாமரை கொடுப்பது நன்மையைத் தரும். தாய் தந்தையின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றிக் கொள்ளும் யோகம் உண்டு. நிறைய சுப விரயங்கள், பாக்கியங்கள் ஏற்படும்.

அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தொழில் ரீதியாக ஆனந்தம் ஏற்படும். உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். விடுபட்ட அம்பாள் வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். கடல் கடந்து தொலைதூரத்திற்கு விமானத்தில் சென்றாவது தெய்வ வழிபாடுகளை செய்து வருவீர்கள்.

பண வரவு நன்றாக இருக்கும். கடன் அமைப்புகள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கக்கூடிய நல்ல காலகட்டம். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. லட்சுமி நரசிம்மர் வழிபாடு, பெருமாள், தாயார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

மகர ராசி பலன்

மகர ராசி மற்றும் லக்னத்திற்கு துணை விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். வெளியிடத்தில், உத்தியோகத்தில், தொழிலில், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த தேவையில்லாத பதட்டங்கள் குறையும். கழிவுப் பாதையில் மிகவும் கவனம் தேவை. சிவன், பார்வதி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். உறவுகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். புதிய நம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். உறவினர்கள் தொடர்பான சங்கடங்கள் தீரும்.

பெரிய ஆபத்தில் இருந்து பாதுகாப்பு ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். நிறைய நன்மைகள் நடக்கும். பணங்கள் சமயத்தில் ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் கவனம் தேவை.

கும்ப ராசி பலன்

கும்ப ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், வழக்குகள் ரீதியாக வெற்றிகள் ஏற்படும். செல்வாக்குகள் கூடும். தொழிலில் இருந்த நீண்ட நாள் கஷ்டங்கள் தீரும். புதிய தொழில் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்திலும், உத்தியோகத்திலும் பெரிய செல்வாக்குகளைப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். உறவுகள் தொடர்பான விஷயத்திலும் பெரிய அனுகூலமும் சந்தோஷமும் ஏற்படும்.

பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். செல்வாக்கு கூடக்கூடிய நல்ல காலகட்டம். தனிப்பட்ட யோக பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் தீரும். பணவரவு அற்புதமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இழுபறியாக இருந்த நிலைமை மாறும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

வலுக்கலான இடங்களில் பார்த்து செல்வது நன்மை பயக்கும். எதிரிகளை அசாதாரணமாக எடை போடுவதைத் தவிர்க்க வேண்டும். முதுகு தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. கணபதி, அம்பாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

மீனம் ராசி பலன்

மீன ராசியினர் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வருவது யோகத்தையும், நம்பிக்கையும் ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழிலில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். வேலை ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும்.

உத்தியோகம், தொழில், வியாபாரம் ரீதியாக நம்பிக்கை ஏற்படும். எல்லா விஷயத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தும். சுவாசக் கோளாறு, அலர்ஜி, வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. அவர்களுடைய வண்டி, வாகனங்களில் அதீத கவனம் தேவை. அம்பாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கர்ப்பிணிகள் இந்த காலகட்டத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+