குறி வச்சா இரை விழணும்.. தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் சூரியன்.. தொட்டதெல்லாம் ஜெயம்

Subscribe to Oneindia Tamil

ஆனி மாத பலன்: விசுவாவசு வருடம், ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

உத்திராயணத்தின் 6 வது மாதம் கடைசி மாதம் ஆனி. பொதுவாகவே மாதாந்திர கிரகம் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் மாற்றத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை வைத்து மாதத்தை நிர்ணயம் செய்வோம்.

Dhanusu lucky zodiac signs

இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் புதன், குரு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும், சிம்மத்தில் செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி, ராகு ஆகிய கிரகங்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு கேதுவில் எல்லா கிரகங்களும் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெளிநாட்டு சக்திகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

இந்த காலகட்டத்தில் நாம் போடக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 ஆம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குப் போகிறார். 29 ஆம் தேதி சுக்கிரன் சொந்த வீட்டுக்கு ஆட்சிக்குப் போகிறார். இந்த ஆனி மாதத்தில் இவை இரண்டும் தான் பெரிய கிரக மாற்றமாக உள்ளன. மற்றபடி அனைத்து வருட கிரகங்களும் அந்தந்த இடத்தில் உள்ளன.

இந்த ஆனி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் அதிர்ஷ்டங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய 3 நட்சத்திரங்கள் 9 பாதங்களைக் கொண்டது தனுசு ராசி. தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். குரு உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருப்பது விசேஷம். உங்கள் ராசியைப் பார்ப்பதால் பெரிய ஏற்றம் உண்டாகும். 3 ஆம் இடத்தில் சனியும், ராகுவும் உள்ளது. வருட கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. முயற்சி ஸ்தானத்தில் மறைவில் அசுப கிரகங்கள் இருப்பது நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். அதிகளவிலான முயற்சியை செய்ய வைக்கும். அதன் மூலம் அதிகளவிலான வெற்றியைப் பெறுவீர்கள்.

வெற்றி

உங்கள் ராசியை குருவே பார்ப்பதால் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். தீர்க்கமான சிந்தனை ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். திருமண பாக்கியம் உண்டாகும். 5 ஆம் இடத்தில் சுக்கிரனும், 6 ஆம் இடத்தில் 12 இல் இருப்பதால் கடன்கள் எல்லாம் தீரக்கூடிய யோகம் உண்டாகும். குழந்தைகள் மூலமாக ஏற்றம் உண்டாகும்.

படிப்பு

9 ஆம் இடத்தில் 5 ஆம் அதிபதி இருப்பது நன்மையை ஏற்படுத்தும். குழந்தைகள் மூலமாக பெருமை உண்டாகும். அவர்களின் மேல்படிப்பு நல்ல படியாக அமையும். நீங்கள் மேல்படிப்புக்காக வெளிநாடு, வெளியூர் போகக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சமசப்தமத்தில் 9 ஆம் அதிபதி இருப்பதால் எதிர்பாலினத்தவர்களால் ஏற்றம் உண்டாகும்.

லாபம்

சூரியன் சமசப்தமத்தில் குருவோடு சேர்ந்திருப்பது நல்லது. ஆட்சிப் பெற்ற புதன் ஏழாம் இடத்தில் இருக்கிறார். இந்த மூன்று கிரகங்களும் இணைந்து அபரிமிதமான ஏற்றத்தை ஏற்படுத்தும். கூட்டுத் தொழிலில் அபரிமிதமான வெற்றி ஏற்படும் வாய்ப்புள்ளது. லாபம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. ஜூன் 22 ஆம் தேதி ஏழாம் அதிபதி 8 ஆம் இடத்தில் போவதால் எதிர்பாலினத்தவரால் சிறு சிறு தொல்லைகள் ஏற்படும். பார்ட்னர்ஷிப் பிசினஸில் சற்று பின்னடைவு ஏற்படும்.

அதிர்ஷ்டம்

பந்தயம், லாட்டரி மூலமாக திடீர் பண வரவு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் 6 ஆம் இடத்துக்கு ஜூன் 29 ஆம் தேதி செல்வதால் புதிய கடன் அமைவது, உடல் நலத்தில் சற்று பின்னடைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

பாக்கியம்

ஜூன் 27 முதல் 29 ஆம் தேதி வரையிலான சந்திராஷ்டம காலத்தில் மட்டும் புதிய முயற்சிகள், பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் அற்புதமான பெரிய ஏற்றத்தைக் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். பாக்கியங்கள் அதிக அளவில் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் கைகூடும். படிக்கும் மாணவர்களுக்கு நினைத்த இடத்தில் மேல்படிப்புக்கான சீட் கிடைக்கும். கடல்சார் தொழில், தங்க வியாபாரம், கல்வி நிறுவனங்களில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+