காசு பணம் துட்டு மணி மணி.. மகர ராசிக்கு கொட்டும் பணம்.. ஆனா பேச்சினால் ஆபத்து நிச்சயம்.. ரொம்ப கவனம்
ஆனி மாத பலன்: விசுவாவசு வருடம், ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
உத்திராயணத்தின் 6 வது மாதம் கடைசி மாதம் ஆனி. பொதுவாகவே மாதாந்திர கிரகம் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் மாற்றத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை வைத்து மாதத்தை நிர்ணயம் செய்வோம்.

இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் புதன், குரு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும், சிம்மத்தில் செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி, ராகு ஆகிய கிரகங்களும் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு கேதுவில் எல்லா கிரகங்களும் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெளிநாட்டு சக்திகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில் நாம் போடக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 ஆம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குப் போகிறார். 29 ஆம் தேதி சுக்கிரன் சொந்த வீட்டுக்கு ஆட்சிக்குப் போகிறார். இந்த ஆனி மாதத்தில் இவை இரண்டும் தான் பெரிய கிரக மாற்றமாக உள்ளன. மற்றபடி அனைத்து வருட கிரகங்களும் அந்தந்த இடத்தில் உள்ளன.
இந்த ஆனி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் அதிர்ஷ்டங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் 9 பாதங்களைக் கொண்டது மகர ராசி. மகர ராசியின் அதிபதி சனி பகவான். உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் சனி இருக்கிறார். ஏழரை சனி, பாத சனி நடந்து கொண்டிருக்கிறது. ராகுவுடன் சேர்ந்த சனியாக இருக்கிறது. பேச்சில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
பண வரவு
இந்த மாதத்தில் சனியால் குடும்பத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இருந்தாலும் பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. வருட கிரகங்களான குரு, சனி, ராகு கேது ஆகியவை அந்தளவு ஏற்றத்தில் இல்லை. மாத கிரகங்கள் என்று சொல்லக்கூடிய பொதுவாகவே சூரியன், செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றை வைத்தே மாத பலன்கள் கணிக்கப்படுகிறது.
ஆரோக்கியம்
ஆனி மாதத்தில் மகர ராசிக்கு 8 ஆம் இடத்தில் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து இருப்பதால் சிறு சிறு தொல்லைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தாயின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படும். படிக்கக்கூடிய குழந்தைகள் உங்களை விட்டு பிரிந்து வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்பு ஏற்படும். சூரியன் உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருப்பதால் புதிய வேலைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு அரசாங்கம் சார்ந்த தொழில்களாக இருந்தால் நிச்சயமாக வேலைகள் கிடைக்கும்.
கடன் கிடைக்கும்
புதிய கடன் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். 6, 8 ஆம் அதிபதி சேர்ந்திருப்பதால் சட்டம், வம்பு, வழக்கு தொடர்பான பிரச்சனைகள், ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் குரு பார்வை இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. 8 ஆம் இடத்தில் செவ்வாய், கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும்.
ஏற்றம்
குழந்தைகளால் சிறு சிறு பிரச்சனைகள் வந்து மறையக்கூடிய வாய்ப்பு ஏற்படும். குழந்தைகள் மூலமாக செலவுகள் வந்து போகும். ஜூன் 29 ஆம் தேதிக்கு மேல் 5 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் பெரிய ஏற்றம் உண்டாகும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். புகழ், பதவி, உயர்வு, பொறுப்பு, அந்தஸ்து உண்டாகும்.
முயற்சிகளில் வெற்றி
குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். மருத்துவ சிகிச்சை எடுப்பவர்களுக்கு கட்டாயம் ஏற்றம் உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் வாய்ப்புகளை உண்டாக்கும். ஜூன் 20 முதல் ஜூலை 1 ஆம் தேதி வரையிலான சந்திராஷ்டம நாட்களில் புதிய முயற்சிகளையும், வெளிநாடு, வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகள், பயணங்கள் செய்ய வேண்டியது இருந்தால் அருகில் உள்ள கோயிலில் பச்சரிசி, நெல் தானமாகக் கொடுப்பது நல்லது.












Click it and Unblock the Notifications