ஆட்டம் ஆரம்பம்.. ஏழரை சனி காலத்தில் மீன ராசிக்கு இப்படி ஒரு லாபமா.. தூக்கிவிடும் ஆனி மாதம்

Subscribe to Oneindia Tamil

ஆனி மாத பலன்: விசுவாவசு வருடம், ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

உத்திராயணத்தின் 6 வது மாதம் கடைசி மாதம் ஆனி. பொதுவாகவே மாதாந்திர கிரகம் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் மாற்றத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை வைத்து மாதத்தை நிர்ணயம் செய்வோம்.

Meenam lucky zodiac signs

இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் புதன், குரு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும், சிம்மத்தில் செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி, ராகு ஆகிய கிரகங்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு கேதுவில் எல்லா கிரகங்களும் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெளிநாட்டு சக்திகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

இந்த காலகட்டத்தில் நாம் போடக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 ஆம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குப் போகிறார். 29 ஆம் தேதி சுக்கிரன் சொந்த வீட்டுக்கு ஆட்சிக்குப் போகிறார். இந்த ஆனி மாதத்தில் இவை இரண்டும் தான் பெரிய கிரக மாற்றமாக உள்ளன. மற்றபடி அனைத்து வருட கிரகங்களும் அந்தந்த இடத்தில் உள்ளன.

இந்த ஆனி மாதத்தில் மீன ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் அதிர்ஷ்டங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீனம்

உயர்ந்த எண்ணங்களை கொண்ட மீனம் ராசிக்காரர்களே உங்களுக்கு ஏழரை சனி நடைபெற்று வருகிறது. உங்கள் ராசி அதிபதி குரு நான்காம் இடத்தில் இருக்கிறார். உத்யோகத்தில் நிலவி வந்த தடைகள் விலகி நல்ல மாற்றம் ஏற்படும். திறமைக்கேற்ற அங்கீகாரத்தால் உத்யோகத்தில் ஏற்றம் உண்டு. பொருளாதாரம் சிறப்பான உயர்வை சந்திக்கும். உத்யோக மாற்றம் முயற்சி செய்வோருக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மாத கிரகங்களான புதன், சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய 4 கிரகங்களின் அமைப்புகளும் முக்கியம். உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்துக்கு அதிபதியான சூரியன் நான்காம் இடத்தில் இருக்கிறார். புதிய வீடு, நிலம் வாங்குவதற்கான அமைப்புகள் ஏற்படும். புதிய கடன் கிடைக்கும். பூர்விக சொத்து கைக்கு வந்து சேரும். போட்டிகள் அதிகம் இருந்தாலும் அதில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

நிலம் சார்ந்த புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் இரண்டாம் ஸ்தானத்துக்கான அதிபதி சுக்கிரன் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். பண வரவு நன்றாக வே இருக்கும். புதிய முயற்சிகள் கைக்கூடும். புதன் பகவான் நான்காம் இடத்தில் இருக்கிறார். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

கூட்டுத் தொழிலில் வெற்றி கிடைக்கும். எதிர்பாலின உறவுகளால் நல்ல ஆதாயம் உண்டு. புதிய முயற்சிகள் கைக்கூடும். தொழிலில் வெற்றி கிடைக்கும். வெளியூர், வெளி மாநில, வெளிநாடு பயணங்களால் பலனடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.

ஆசிரியர்கள், தங்க நகை துறை, மீன் வியாபாரம், பேக்கிங் துறையில் இருப்போருக்கு இந்த காலம் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நல்ல வேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் எதிர்பாராதளவுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உங்களின் வாக்கு ஸ்தானம் சிறப்பாக இருப்பதால் பேச்சுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

வீண் விரயம் அதிகரிக்கும். காரியங்களில் சின்ன சின்ன தடைகள் வந்து செல்லும். தந்தை உடல்நலத்தின் கூடுதல் அக்கறை வேண்டும். உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கொழுப்பு, ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

3.7.2025 - 6.7.2025 சந்திராஷ்டம தினம் என்பதால் அன்றைய தினம் புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். அந்த காலத்தில் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத நேரத்தில் அருகில் உள்ள கோசாலையில் மாடுகளுக்கு உணவளித்து விட்டு பயணம் செய்யலாம். விநாயகர், தட்சிணாமூர்த்தி வழிபாடு ஏற்றங்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+