ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் மேஷம்.. தொழிலில் வெற்றி.. பண மழை கொட்டப் போகுது
Aani Maadha palan: வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும்.

பொதுவாக ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுழுக்கு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். உடற்பயிற்சி செய்வது, கடினமான கனமான பொருள்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். உரிய மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் இஷ்ட தெய்வ வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். யார் எதைக் கூறினாலும் அதைப் பற்றி காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
தொழில்
தொழில் ரீதியான தைரியம் ஏற்படும். நிறைய புரொஜக்டுகளில் வெற்றி உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திருமணமானவர்கள், காதல் அமைப்பில் உள்ளவர்கள் தங்கள் துணைக்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
நினைத்தது நடக்கும்
எல்லாவற்றையும் செய்துவிட்டு சொல்லிக் காமிக்காமல் இருப்பது நல்லது. பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்த இடைவெளிகள் குறையும். பதட்டத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு பொய்க்கு பல பொய்கள் சொல்லும் நிலை உண்டாகும். நினைத்தது எல்லாம் நடக்கும் காலகட்டமாக இருக்கும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. அடுத்தடுத்து நன்மைகள் உண்டாகும்.
கடன் தீரும்
அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். நீண்ட நாட்களாக கடன் அமைப்பில் இருந்து வெளியில் வர வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு நல்ல ஐடியாக்கள் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் நம்பிக்கையானவர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் அனுகூலம் காணப்படும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பணக் கஷ்டங்கள், மனக் கஷ்டங்கள் படிப்படியாகத் தீரும்.
பணவரவு
பிள்ளைகளின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். துணை அல்லது துணைவியாரின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய மாதமாக இருக்கும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். முதலீடுகள், சேமிப்புகளில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடுகள் வாழ்க்கையில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் உண்டாக்கும்.












Click it and Unblock the Notifications