Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனி மாத ராசி பலன் 2020 : இந்த 4 ராசிக்காரங்களுக்கும் ரொம்ப செழிப்பான மாதம்

ஆனி மாதம் சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியைப் பொறுத்து தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆனி மாதம் மிதுன மாதம். இந்த மாதத்தில் மிதுனம் ராசியில் சூரியனின் பயணம் தொடங்குகிறது. சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியைப் பொறுத்து தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தில் இந்த மாதம் மிகப்பெரிய மாற்றம் நிகழ்க்கிறது. சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள செவ்வாய் ஆனி 4 ஆம் தேதி ஜூன் 18 ஆம் தேதி மீனம் ராசிக்கு மாறுகிறார். அதே நாளில் மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கப் போகிறார். ராகு மிதுனத்தில் சூரியனோடு இணைந்திருக்கிறார்.

குரு பகவானும், சனிபகவானும் மகர ராசியில் வக்ரகதியில் சஞ்சரிக்கின்றனர். ஆனி 15ஆம் தேதி முதல் குரு மீண்டும் தனுசு ராசிக்கு வருகிறார். 11ஆம் தேதி சுக்கிரன் வக்ர கதி முடிகிறது. 28ஆம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. கேது தனுசு ராசியில் மீண்டும் குருவோடு இணைந்து பயணிக்கப் போகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் அலுவலக இடமாற்றம் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது ஊடலுடன் கூடல் வரும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சாந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை நடக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகளுக்குப் பிறகு நன்மையில் முடியும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சின்ன காயம் வந்தால் கூட உடனே கவனிங்க. மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை.

மகரம்

மகரம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். ஆறாம் வீட்டில் சூரியன், சந்திரன், புதன், ராகு என நான்கு கிரகங்கள் தொடக்கத்தில் இணைவது பாதிப்பை தராது. சூரியன் மட்டும் அவ்வப்போது மனச்சோர்வு, உடல் சோர்வை தருவார். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கூடுதல் விழிப்புணர்வும் தேவை. சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும். சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட ம் கைகூடி வரும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருள்களை வாங்குவீர்கள். உறவினர்களால் அடிக்கடி பிரச்சினை வரும் பேச்சில் கவனமாக இருங்க. திருமண வாழ்க்கை சந்தோசத்தை தரும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணப்புழக்கம் கூடும். வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கும்பம்

கும்பம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் செழிப்பான காலம். உங்களின் பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பண வரவு திருப்தியை தரும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பெண்களால் நன்மை ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கை கூடி வரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல செய்திகள் தேடி வரும். புதன் இடமாற்றத்தால புத்திக்கூர்மை அதிகரிக்கும். வேலை மாற்றம், தன லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் அமையும். மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும் கால கட்டம். வேலை வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். சுப செலவுகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, காது மூக்குத் தொண்டை வழியாக பிரச்சினைகள் ஏற்படும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

மீனம்

மீனம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்கும். பிள்ளைகளால் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது. தேவையான பணம் கிடைக்கும். சிக்கனத்தை கடைபிடித்தால் சேமிக்கலாம். உயர் படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த மாதம் உங்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை அவசியம். அவ்வப்போது சோர்வு மந்தநிலை வரும் கவனமாக இருங்க. பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் வரலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+