Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனி மாத ராசி பலன் 2020 : தேவர்களின் மாலைப்பொழுது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

ஆனி மாதம் சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆனி மாதம் மிதுன மாதம். இந்த மாதத்தில் மிதுனம் ராசியில் சூரியனின் பயணம் தொடங்குகிறது. சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் கடகம் வரையிலான ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தில் இந்த மாதம் மிகப்பெரிய மாற்றம் நிகழ்க்கிறது. சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள செவ்வாய் ஆனி 4 ஆம் தேதி ஜூன் 18 ஆம் தேதி மீனம் ராசிக்கு மாறுகிறார். அதே நாளில் மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கப் போகிறார். ராகு மிதுனத்தில் சூரியனோடு இணைந்திருக்கிறார்.

குரு பகவானும், சனிபகவானும் மகர ராசியில் வக்ரகதியில் சஞ்சரிக்கின்றனர். ஆனி 15ஆம் தேதி முதல் குரு மீண்டும் தனுசு ராசிக்கு வருகிறார். 11ஆம் தேதி சுக்கிரன் வக்ர கதி முடிகிறது. 28ஆம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. கேது தனுசு ராசியில் மீண்டும் குருவோடு இணைந்து பயணிக்கப் போகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும். முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் சூரியன் ராகு உடன் இருப்பது அதிக நன்மை. குரு, சனி, புதன், சுக்கிரன் என நான்கு கிரகங்கள் வக்ரம் பெற்று வலு குறைந்து இருக்கின்றனர். உங்களின் பண பிரச்சினை தீரும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. அரசியல், அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பிரச்சினை ஏற்படும். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான மாற்றம். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ராசி நாதன் 12ஆம் வீட்டில் அமர்வது சுமார்தான் எந்த பொருளும் வாங்கதீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம். மாணவ மாணவிகளுக்கு அற்புதமாக உள்ளது. படிப்பில் புத்திசாலித்தனம் பளிச்சிடும். வியாபாரிகள் முன்னெச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருந்தால் லாபம் கிடைக்கும். தொழிலில் கவனம் இல்லாவிட்டால் நஷ்டம்தான். விழிப்புணர்வு இருக்க வேண்டிய மாதம்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் இரண்டாமிடத்தில் ராகு உடன் சஞ்சரிப்பதால் சம்பள உயர்வு கிடைக்கும். பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். கவனமாக பேசுங்க இல்லாவிட்டால் குடும்பத்தில் சிக்கல்கள் வரலாம் கோபத்தை கட்டுப்படுத்துங்க. சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பதால் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். இரண்டாம் வீட்டில் சூரியன் உடன் சர்ப்ப கிரகமான ராகுவின் சேர்க்கை சில பாதிப்புகளையும், செயல்களில் தடைகளையும் ஏற்படுத்துவார். வீட்டில் தம்பதியரிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதிக்கும் கவனமாக இருக்கவும். வேலைக்குச் செல்லும் போது கவனமாக பாதுகாப்புடன் செல்லவும். நோய் தொற்று பரவும் காலம் என்பதால் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். என்றாலும் அதற்கேற்ப ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். இல்லத்தரசிகளுக்கு வீட்டிற்குத் தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

மிதுனம்

மிதுனம்

உங்க தைரிய ஸ்தானதிபதி சூரியன் உங்க ராசியில் சஞ்சரிப்பதால் வளர்ச்சியும் வெற்றியும் வரப்போகிற மாதம். சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் புதன் மற்றும் ராகு உடன் இணைந்து இருக்கிறார் தலைமைப் பதவி கிடைக்கும் அப்பாவின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பண வரவுகள் சராசரியாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். உடல் அசதியும், மனதில் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். மாணவ மாணவியர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு வீட்டில் மன நிம்மதி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருக்கவும். கடவுள் அருளினால் கவலைகள் பறந்தோடும்.

கடகம்

கடகம்

உங்க தன ஸ்தானாதிபதி சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும் வெளிநாடு தொழில் தொடர்புகள் மூலம் பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் பின்னர் உடனுக்குடன் சரியாகும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். வீண் விரைய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு சொந்த நாட்டிற்கு திரும்பும் வாய்ப்பு ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல மாதம். புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லாபமும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். இந்த மாதம் பணம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொண்டு படிப்பார்கள். இல்லத்தரசிகளுக்கு இது மகிழ்ச்சியான மாதம் என்றாலும் அவ்வப்போது சோர்வும் களைப்பும் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவர் ஆலோசனை அவசியம். மாத முற்பகுதியில் பணவரவு அதிகமாக இருக்கும். மாத பிற்பகுதியில் மருத்துவ செலவுகள் அம்மா அப்பா, வாழ்க்கைத்துணைக்கு செலவு செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+