ஆனி மாத ராசி பலன் 2023: சூரிய பெயர்ச்சியால் யாருக்கு திடீர் ஜாக்பாட்..செக் பண்ணுங்க
சென்னை: ஆனி மாதம் மிதுன மாதம் நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசிக்கு பெயர்ச்சியாக ஒரு மாதம் பயணம் செய்யும் மாதம் ஆனி மாதம். சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம்: உங்கள் ராசிநாதன் சூரியனின் பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. லாபகரமான மாதம். நினைத்த காரியம் நிறைவேறும். எல்லா செயல்களும் வெற்றியடையும். உங்களின் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும். பத்தாமிடத்தில் பயணம் செய்யும் புதனால் வியாபாரம் விருத்தியாகும் லாபமும் தன வரவும் அதிகரிக்கும். திடீர் ஜாக்பாட் வந்து திக்குமுக்காட வைக்கும். கண்டச்சனியால் உங்களின் உடலில் அசதியும் மந்த நிலையும் உண்டாகும். பாக்ய ஸ்தான குருவினால் ஆன்மீக பயணம் செல்வீர்கள். உங்களுக்கு வேலை விசயமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும்
கன்னி: உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் நீங்கள் செய்யும் செயல்கள் வெற்றியடையும். காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். மாணவர்கள் வேலைக்காகவும் படிப்பதற்காக வெளிநாடு செல்லும் நிலை உண்டாகலாம். அஷ்டமத்து குருவினால் வரவு செலவுகளில் மிகவும் கவனமாக இருக்கவும். லாப ஸ்தான சுக்கிரனால் தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத்துணையின் உதவி கிடைக்கும். பெண்களுக்கு திடீர் லக் வரும். சுக்ர யோகத்தால் நகை, ஆடை ஆபரணம் ஆடம்பரப்பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். உங்களின் தொழில் உத்தியோகம் மேன்மையடையும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அஷ்டமத்து ராகுவினால் மனதில் பாரம் அதிகரிக்கும் குடும்ப கேதுவினால் பண வரவு அதிகரிக்கும்.
துலாம் : பாக்ய ஸ்தான சூரியனால் பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்களில் வேகம் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பிள்ளைகளால் சுப செய்திகள் வந்து சேரும். உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்துகொள்வீர்கள் விவசாயம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியும் கிடைக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவைத் தவிர்க்கவும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே.. இந்த மாதம் அரசு அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வாகனபயணங்களில் வேகத்தை விட நிதானம் அவசியம். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் வழிபாடு சிறப்பைத் தரும். அஷ்டமத்து சனியால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பழைய வீட்டை விலைக்கு வாங்கி புதுப்பிப்பீர்கள். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் யோகம் அதிகரிக்கும். ஜவுளி வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும் குழந்தைகளின் விஷயத்தில் கவனம் தேவை ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார். உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் சென்று ஆலய தரிசனம் செய்வீர்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications