ஆனி மாத ராசி பலன் 2022.. நவகிரகங்களினால் இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்

ஆனி மாதம் மிக நீண்ட மாதமாக ஆனி மாதம் இருக்கிறது. இந்த மாதத்திற்கு 32 நாட்கள் உள்ளது. கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரியனின் வடதிசைப் பயணக் காலமான உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. தமிழ் மாதங்களில் சித்திரை வருடப்பிறப்பு தொடங்கி வரும் மூன்றாவது மாதம் ஆனி மாதமாகும். மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இது மிதுன மாதம் என்றும் அழைக்கலாம். மிக நீண்ட மாதமாக ஆனி மாதம் இருக்கிறது. இந்த மாதத்திற்கு 32 நாட்கள் உள்ளது. கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஆனி மாதத்தில் சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். 32 ஆம் தேதி கடக ராசிக்கு இடம் பெயர்கிறார்.
ரிஷப ராசியில் இருக்கும் புதன்,18 ஆம் தேதி மிதுன ராசிக்கு சென்று 32 ஆம் தேதி கடக ராசியில் அமர்கிறார்.
மேஷ ராசியில் நிற்கும் சுக்கிரன் 4ம் தேதி ரிஷப ராசிக்கு மாறி 29 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்கிறார்.
மீன ராசியில் இருக்கும் செவ்வாய் 12ஆம் தேதி மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறார். கும்ப ராசியில் இருக்கும் சனி வக்ரம் அடைந்து 28 ஆம் தேதி மகர ராசிக்கு வருகிறார்.

தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி இந்த ஆனி மாதம். தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாத காலம். ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
ஆனி மாதத்தில் அற்புதமான பலன்களைக் காணப்போகிறீர்கள்."வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்" என்று பாட்டுப் பாடி எதிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். செலவுகள் பல வழிகளில் வந்தாலும் அதற்குத் தகுந்த வரவும் கிடைக்கும். திடமான சிந்தனையோடு காரியம் செய்யுங்கள். சபலப்பட்டு சங்கடங்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள். வீடு மனை வாங்கலாம். புதிய வீட்டிற்குக் குடிபோகலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். தொழில் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத முட்டுக்கட்டைகள் தோன்றும். ஹெர்னியா, அப்பன்டிஸ் போன்ற சின்ன ஆபரேஷன்கள் செய்யும் நிலையும் ஏற்படலாம். குடும்பத்தின் மீது ஒரு பற்றுதல் இல்லாத நிலை உருவாகும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். திடீரென்று ஏற்படும் மன அழுத்தத்தால் சிலருக்கு உறக்கம் வராது. தம்பதிகள் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும்.

ரிஷபம்

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே.. ஆனி மாதத்தில் அனுகூலங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். "கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு அமர்கிறான்" என்ற பழமொழி உண்டு. ஆவேசமாகப் பேசுவதை அறவே விலக்கி விடுங்கள். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு வரும். தொழிலில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கலாம். சட்டம், பொறியியல். மருத்துவம் போன்ற தொழில்கள் வெற்றிகரமாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மன நிம்மதி உண்டாகும். மன இறுக்கம் விலகி குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வங்கியில் எதிர்காலத்திற்கான பணத்தை டெபாசிட் செய்வீர்கள். தடைப்பட்ட வருமானம் சரளமாக வர ஆரம்பிக்கும். புதிய நண்பர்களால் இனிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு‌ மாணவர்கள் விரும்பிய பட்டப்படிப்புக்கு இடம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
ஆனி மாதத்தில் சிறப்பான பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். வாழ்க்கையில் எத்தனையோ சங்கடங்களை சந்தித்த நீங்கள் சந்தோஷக் காற்றைச் சுவாசிக்கப் போகிறீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வாங்குவீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இடையூறுகளைக் கடந்து நடந்தேறும். பிரிந்து போன உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் தடம்பதித்து அதிக வருமானம் பெறுவீர்கள். தலைவலி, ரத்த அழுத்தம், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படலாம். பெண்கள் குடும்பப் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மாணவர்கள் கல்வியில் முன்னிலை வகிப்பார்கள்.

 கடகம்

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
ஆனி மாதத்தில் யோகமான பலன்களைக் அனுபவிக்கப் போகிறீர்கள். வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக நெஞ்சில் அலைமோதும். அதற்கான வாய்ப்பு வீடு தேடி வரும். பயன்படுத்திக்கொள்ளுங்கள். வெளியூர்ப் பயணங்கள் செல்வதன் மூலம் தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். பரம்பரை சொத்துக்களில் இருந்த வில்லங்கத்தைப் பேச்சுவார்த்தை மூலம் முடிப்பீர்கள். பிள்ளைகளை அணுக்கமாகக் கண்காணியுங்கள். அவர்களால் பிரச்சனை உண்டாக வாய்ப்பு இருக்கிறது. பெண் பிள்ளைகளை உரிய வயதில் திருமணம் செய்ய முயற்சி எடுங்கள். படிப்பைக் காரணம் காட்டி திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாம். தொழிலுக்காக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்த பணம் சில தடங்கல்களுக்குப் பின்னால் வந்து சேரும்.

சிம்மம்

சிம்மம்

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
ஆனி மாதத்தில் இனிமையான பலன்களைச் சந்திக்கப் போகிறீர்கள். அரசாங்க வேலைகளுக்கான ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழைச் சேர்ப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த முதலீடுகளை அதிகப்படுத்துவீர்கள். நிதி நிறுவனங்களில் அதிகமாக பணம் போட வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்யாதீர்கள். கணவன்-மனைவி உறவைப் பேணுவதில் அக்கறை காட்டுவீர்கள். சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தேவையில்லாமல் உறவினர்கள் வம்புக்கு இழுத்தால் ஒதுங்கிப் போய் விடுங்கள். உங்கள் தொழிலைக் கெடுக்க போட்டியாளர்கள் செய்யும் முயற்சிகள் பலிக்காது. பத்திரிகையாளர்கள் பாராட்டைப் பெறுவார்கள். தாய் தந்தையர் பக்கபலமாக இருப்பார்கள். அலட்சியமாக எந்த வேலையையும் பார்க்க வேண்டாம். வெளியூரில் தங்கும்போது பொருட்களைப் பத்திரமாக வைத்திருங்கள்.

கன்னி

கன்னி

அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
ஆனி மாதத்தில் தேனீ போல சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். உங்கள் நிம்மதியைக் கெடுத்த வழக்குகள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் அமைதியற்ற நிலை உருவானாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். மருத்துவம், கணிதம், பொறியியல், சட்டம் படிக்கும் மாணவர்கள் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிப்பார்கள். உங்களுடைய பேச்சாலும் செயலாலும் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தொழில் துறையில் அதிக முன்னேற்றம் ஏற்படும். சில காலமாக தொந்தரவு செய்து வந்த நோய் விலகும். ஆரோக்கியம் மேம்படும். அரசியல்வாதிகள் புகழ் அடைவார்கள். புதிய முதலீட்டில் அதிக லாபம் பெறுவீர்கள்.


உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+