ஆனி மாத பலன்கள்: கடக ராசிக்கு வச்ச குறி தப்பாது.. ஜூலை 1க்கு பிறகு ராஜயோகம்.. பேச்சு தான் பிரச்சனையே
ஆனி மாத பலன்கள்: ஜூன் 14 ஆம் தேதி ஆனி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஆனி மாதம் ஆரம்பிக்கும்போது புதன் தனது சொந்த வீடான மிதுன வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில் இந்த மாதம் துவங்கவுள்ளது. குரு சுக்கிரன் கடக வீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மகர வீட்டை குரு சுக்கிரன் பார்க்கின்றனர். கும்பத்தில் ராகு, மீனத்தில சனி பகவான் இருக்கின்றனர்.
ஜூன் 22 ஆம் தேதி புதன் கடகத்தை நோக்கி வந்து குரு சுக்கிரன் புதன் இணையப் போகிறது. 20 ஆம் தேதியே செவ்வாய் 7 ஆம் பார்வையை விருச்சிகத்துக்கு கொடுக்கப் போகின்றனர். இந்த மாதத்தில் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்புகள் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

கடகம்
கடக ராசியினருக்கு ஆனி மாதம் மிகவும் சிறப்பான மற்றும் முன்னேற்றம் தரக்கூடிய காலமாக அமையலாம். குரு மற்றும் சுக்கிரன் உங்கள் ராசியில் இணைந்து இருப்பதால் ராஜயோக பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முயற்சிகள் நிறைவேறுவதுடன், தொழில், வியாபாரம் மற்றும் பொருளாதார விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் உருவாகலாம்.
விரயம் வரும்
வீண் விரயங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். குரு 5, 7, 9 ஆம் இடத்தை பார்வை செய்வதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுக்கும். 9 ஆம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் நிறைய பாக்கியங்கள் உண்டாகும். ஜூன் 20 ஆம் தேதிக்குப் பிறகு பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இதுவரைக்கும் இருந்து வந்த தடைகள் நீங்கள். குடும்ப விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
தொழில்
தொழிலில் முதலீடு செய்யக்கூடிய எண்ணங்கள் ஏற்படும். வங்கிக் கடன்கள் கிடைப்பதற்கான யோகம் உண்டு. புதிய தொழில் முனைவோராவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சூரியன் 11 ஆம் இடத்தில் இருக்கும்போது தூக்கத்தில் நிறைய தொந்தரவுகள் ஏற்படும். சனியின் அமைப்பு நன்றாக இருப்பதால் வேலையில் இருந்து தொய்வு நீங்கும். அதேசமயம் வேலைப் பளு அதிகரிக்கும் சூழல் உருவாகும்.
பேச்சில் கவனம்
பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். 5 ஆம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் பெயர், புகழ், அந்தஸ்து, குழந்தை பாக்கியம், கெளரம், கீர்த்தி, செல்வாக்கு உண்டாகும். நிறைய கடக ராசியினருக்கும் திருமண யோகம் உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய யோகம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
பணவரவு
விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பணவரவு உங்களுக்கு அபரிமிதமானதாக இருக்கும். தூங்கவிடாமல் வேலை செய்வதற்கான சூழல் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்படும். வெளிமாநிலம், வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பிள்ளைகள் மூலமாக நன்மைகள், சந்தோஷங்கள், கெளரவம், புகழ் ஏற்படும்.
திருமண யோகம்
காதல் மற்றும் திருமணத்திற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளது. ஜூன் மாதம் 19 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 12 ஆம் தேதிக்குள் நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கும் காலகட்டமாக இருக்கும். ஜூலை 1 ஆம் தேதி முதல் உங்களுக்கு வெற்றி கொடி கட்டும் காலகட்டமாக இருக்கும். பிறமொழி, மதம் பேசக்கூடிய அமைப்பில் ஒரு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
-
ஆனி மாதத்தில் மிதுன ராசிக்கு ராஜயோகம்.. தொழில், பணவரவில் அதிரடி முன்னேற்றம்! -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
ஆனி மாத பலன்: ராஜயோகத்தைப் பெறும் மேஷம் ராசி.. இந்த மாதத்தை தவற விட்டுடாதீங்க -
ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம் -
ஜூன் 2026 அதிர்ஷ்ட ராசிகள்: குரு, சுக்கிரன், செவ்வாய் அருளால் முன்னேற்றம் காணும் 5 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications