ஆனி மாத பலன்: கன்னி ராசிக்கு குரு சுக்கிரன் தரப்போகும் சர்ப்ரைஸ்.. 2 விஷயத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

ஆனி மாத பலன்கள்: ஜூன் 14 ஆம் தேதி ஆனி மாதம் பிறந்துள்ளது. இந்த ஆனி மாதம் ஆரம்பிக்கும்போது புதன் தனது சொந்த வீடான மிதுன வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில் இந்த மாதம் துவங்கவுள்ளது. குரு சுக்கிரன் சிம்ம வீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மகர வீட்டை குரு சுக்கிரன் பார்க்கின்றனர். கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் இருக்கின்றனர்.

ஜூன் 22 ஆம் தேதி புதன் சிம்மத்தை நோக்கி வந்து குரு சுக்கிரன் புதன் இணையப் போகிறது. 20 ஆம் தேதியே செவ்வாய் 7 ஆம் பார்வையை விருச்சிகத்துக்கு கொடுக்கப் போகின்றனர். இந்த மாதத்தில் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்புகள் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

aani-month-horoscope-2026-kanni-rasi-set-to-receive-rajayoga-and-major-success-opportunities

கன்னி

கன்னி ராசியினருக்கு குரு பகவான் 11 ஆம் இடத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். 3, 7, 9 ஆம் இடத்தை குரு பார்க்கிறார். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு மாற்றம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் குரு அமர்ந்து 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். 3, 4 மணி நேரம் பயணித்துச் சென்று வரக்கூடிய யோகம் உண்டாகும். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு சென்ற வரக்கூடிய யோகம் உண்டாகும்.

விமானத்தில் செல்லக்கூடிய யோகம் உண்டு. தைரியம், வீரியம், வெற்றி ஸ்தானத்தை குரு பார்க்கப் போகிறார். நிறைய முயற்சிகளை மேற்கொண்டு, அதில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புள்ளது. குரு, சுக்கிரன் இணைந்து சுபத்துவமாகியுள்ளதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும். தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவீர்கள். நிறைய நல்லவை நடக்கும். பிள்ளைகள் மூலமாக பெருமை உண்டாகும்.

திருமண யோகம்

கால் பாதம் தொடர்பான வலிகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முழு கவனத்தோடு செயல்பட வேண்டிய காலம். 5, 7 ஆம் இடத்தை குரு பார்க்கப் போவதால் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். திருமண யோகம் உண்டாகும். காதல் திருமணம், திருமண யோகம் உண்டாகும். குடும்பத்தில் காதலுக்கு வீட்டில் கிரீன் சிக்னல் கிடைக்கும். திருமணம் குறித்த நிகழ்வுக்கு நீங்கள் முன் நிற்கும் அமைப்பு உள்ளது.

திருமண வாழ்க்கை இனிக்கும். புதிய தொடக்கங்கள் ஆரம்பமாகும். குரு 11 இல் இருப்பதால் கமிஷன் ஏஜென்ஸி, ரியல் எஸ்டேட், கலைத் துறை, ஐடி, மீடியா துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை இல்லாத நன்மைகள் கிடைக்கக்கூடிய யோகம் பெறுவீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று முடிவு செய்து நிலை நிறுத்திக் கொள்வீர்கள். 5 ஆம் இடம் வலுப்பதால் பெயர், புகழ், அந்தஸ்து, கீர்த்தி, சொல்வாக்கு, செல்வாக்கு உயரும் நல்ல காலகட்டமாக இருக்கும்.

பிளான் பண்ணிக்கோங்க..

எந்த விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும், எதை வேண்டாம் என்று புறந்தள்ள வேண்டும் என்று சிந்தித்து செயல்படுவது நல்லது. இல்லையெனில், அதன் மூலம் தேவையில்லாத அலைச்சல், விரயம் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்குவீர்கள், வருமானம் அதிகரிக்கும் யோகம் உண்டு, உங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் அமைப்பு, திருமணத்திற்கான வாய்ப்பு ஏற்படும்.

நீண்ட நாட்களாக ஆரோக்கிய குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும். தலைவலி, கால் வலி தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆனி மாதம் உங்களுக்கு அட்டகாசமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வரும் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+