"காசு பணம் துட்டு மணி மணி".. தனுசு ராசிக்கு ராஜயோகம்.. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!
ஆனி மாத ராசி பலன் 2026: ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த ஆனி மாதத்தில் தனுசு ராசியினருக்கான அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன. மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. மேலும், புதன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பத்ர ராஜயோகமும் அமைகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தனுசு ராசியினருக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த ஆனி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கவுள்ள பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு சிவன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கணவர் மனைவிக்கிடையே வரும் இடைவெளியை பேசி தீர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
யோகம்
திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும். பிள்ளைகளின் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகளுக்கு வீடு வாசல் கிடைக்கும் யோகம் உண்டு. அவர்கள் கடல் கடந்து தொலைதூரத்தில் உத்தியோகம், படிப்புக்கு செல்லக்கூடிய யோகம் உண்டு.
சிக்கல் தீரும்
இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். வேலை ஆட்களால் குடும்பத்தில் கோபத்தைக் காட்டாமல் இருப்பது நன்மை பயக்கும். உங்களுக்காக எல்லா விஷயத்தையும் துணை செய்ய தயாராக இருப்பதால் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
பணவரவு
எல்லா வகையிலும் பண வரவு உண்டாகும். பெரும் புகழ் ஏற்படும். எல்லாவற்றிலும் முதன்மையாக இருப்பீர்கள். செவ்வாய் பெயர்ச்சியால் எதிரிகளின் பலம் குறைந்தாலும், உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் பணியிட அழுத்தங்கள் அதிகரிக்கலாம். குழந்தைகள் தொடர்பான செலவுகள் மற்றும் குடும்பப் பொறுப்புகள் கூடும். சேமிப்புகளை கவனமாக கையாள வேண்டிய காலம் இது.
அனுகூலம்
வெளியுலகத்திற்கு, கெளரவத்திற்காக வாழாமல் இருப்பது நன்மை பயக்கும். யார் என்ன செய்தாலும், பேசினாலும் தவிர்த்துவிட்டுச் செல்வது நன்மை பயக்கும். ஏற்றம், அனுகூலம், சந்தோஷம், யோக பலம் அதிகளவில் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரம், உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்
பயணங்கள்
எந்தப் பயணங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. குலதெய்வத்தை சென்று வழிபாடு செய்து வருவீர்கள். சுக்ரன் பெயர்ச்சியால் சில நன்மைகள் கிடைக்கும். பெற்றோர் வழி ஆதரவு, புதிய வேலை வாய்ப்புகள், வெளிமாநிலம் அல்லது வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மாற்றங்களை மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும்.
வழிபாடு
குடும்பத்தில் சிறு சிக்கல்கள், பணம் கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றங்கள் மற்றும் உடல்நலச் செலவுகள் ஏற்படலாம். பணியிடத்தில் மற்றவர்களை முழுமையாக நம்பாமல், உங்கள் பொறுப்புகளை நீங்களே கவனிப்பது நல்லது. தொழில், வியாபாரம், கல்வி மற்றும் குடும்ப விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட்டால் பாதிப்புகளை குறைத்து முன்னேற்றத்தை அடைய முடியும். சனீஸ்வர பகவானை வழிபடுவது நன்மை தரும்.












Click it and Unblock the Notifications