Mesham: மேஷ ராசிக்கு 30 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. காதலுக்கு கிரீன் சிக்னல் உறுதி

Subscribe to Oneindia Tamil

ஆனி மாத ராசி பலன் 2026: ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியினருக்கான அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன. மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. மேலும், புதன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பத்ர ராஜயோகமும் அமைகிறது.

aani-month-horoscope-2026-what-kind-of-benefits-will-get-mesham-rasi-people-during-this-month

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், மேஷ ராசியினருக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கவுள்ள பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். அவர்கள் விஷயத்தில் காணப்பட்டு வந்த மன வருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். தொழிலில் திட்டுமிட்டு செயல்படுவீர்கள். பெயர், புகழ் கிடைக்கும் நல்ல காலகட்டம்.

முன்னேற்றம்

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த விஷயங்கள் பரிபூரணமாக மாறும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். ஆச்சரியப்படும் அளவுக்கு பணவரவு அற்புதமாக இருக்கும். உங்களுடன் தொழில் செய்ய நிறைய பேர் நம்பி வருவார்கள். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள்.

மகிழ்ச்சி

ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மேன்மையைத் தரும். தூக்கத்தை தவிர்க்காமல் நன்றாக தூங்குவது நன்மை பயக்கும். காலநேரம் பார்க்காமல் உழைத்துக் கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. மன அழுத்தம் தீரும். நினைக்காத காரியங்கள் நடக்கும் நல்ல காலகட்டம். அற்புதமும், மகிழ்ச்சியும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம்.

காதல்

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது, மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது, உடம்பில் அக்கறை செலுத்துவது போன்ற அமைப்பு உள்ளது. புதிய அறிமுகங்கள் ஏற்படும். காதல் தோல்வி அடைந்தவர்கள் அதில் இருந்து மீண்டு புதிய காதல் அமைப்பு ஏற்படும். நேர்மறையான அமைப்பு உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

வழிபாடு

தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். தொழிலில் ஏற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உரிய மருத்துவ ஆலோசனைப் பெறுவது நன்மை. திங்கள்கிழமையில் குரு வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+