ஆனி மாத ராசி பலன்: விருச்சிக ராசிக்கு திடீர் முன்னேற்றம், பணவரவு.. கவனம் தேவைப்படும் 2 விஷயங்கள்!

Subscribe to Oneindia Tamil

ஆனி மாத ராசி பலன் 2026: ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த ஆனி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கான அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன. மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. மேலும், புதன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பத்ர ராஜயோகமும் அமைகிறது.

aani-month-horoscope-2026-what-kind-of-benefits-will-get-viruchigam-rasi-people-during-this-month

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், விருச்சிக ராசியினருக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த ஆனி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கவுள்ள பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு மன அழுத்தம் கண்டிப்பாக ஏற்படும். குரு நன்றாக இருந்தாலும் ஆனி மாதத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். உத்தியோகத்தில் அவசரப்பட்டு பேப்பர் போடுவதை தவிர்க்க வேண்டும். பெருமாள், தாயார், அனுமன் வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும். அனுமன் சாலிஷா கேட்பது நன்மையைக் கொடுக்கும்.

கவனம்

மூட்டு வலி, ஜாயிண்டுகளில் ஏற்படும் வலிகளைப் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நன்றாக இருக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் இருப்பது நன்மை. யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம்.

முன்னேற்றம்

நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். ஆச்சரியமான முன்னேற்றங்கள் காணப்படும். சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உத்தியோகம், தொழில், வேலை, ஜிஎஸ்டி, டாக்ஸ் போன்ற விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். போனில் பேசும்போது கூட மற்றவர்களைப் பற்றி குறை கூறாமல் இருப்பது நன்மை பயக்கும்.

சுபகாரியங்கள்

குடும்பத்தில் இருப்பவர்கள் விஷயத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது சகலவித நன்மைகளையும் ஏற்படுத்தும். நிறைய சுப காரியங்கள் நடக்கும் காலகட்டம். கோபப்படுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மற்றபடி எல்லா நன்மைகளும் நடக்கும் காலகட்டம்.

பணவரவு

தொழில், வியாபாரம் மற்றும் பணவரவு தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். நண்பர்கள் மற்றும் முக்கிய நபர்களின் ஆதரவு மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும்.

வழிபாடு

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே நல்ல புரிதல் ஏற்படும். இருப்பினும், பேச்சில் நிதானம் கடைபிடிப்பது அவசியம். தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் கோபத்தை தவிர்க்க வேண்டும். உடல்நலத்தில் சிறிய சோர்வு அல்லது தூக்கமின்மை பிரச்சினைகள் ஏற்படலாம். ஆன்மிக வழிபாடு மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் இந்த மாதத்தை மேலும் சிறப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+