ஆவணி மாத ராசி பலன் 2021 - இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்
ஆவணி மாதத்தில் நவகிரகங்களில் முக்கிய இடப்பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமமும் யோகமும் தேடி வரப்போகிறது.
சென்னை: ஆவணி மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. பணவரவு அபரிமிதமாக இருக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். யோகங்களும், அதிர்ஷ்டங்களும் அதிகம் நடைபெற உள்ள இந்த மாதத்தில்
நிம்மதியும் சந்தோஷமும் தேடி வரப்போகிறது.
இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சிம்ம ராசியில் ஆட்சி பெற்ற சூரியனுடன் செவ்வாய் புதன் பயணம் செய்கின்றனர். ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் நீச்சம் பெற்ற சுக்கிரன், விருச்சிகத்தில் கேது மகரத்தில் சனி வக்ரம், கும்ப ராசியில் குரு வக்ரம் என கிரகங்களின் சஞ்சாரம் எல்லாம் உள்ளது. கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால் ஆவணி 10ஆம் தேதி புதன் கன்னி ராசிக்கு செல்கிறார். ஆவணி 20ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். ஆவணி 29ஆம் தேதி குரு மகர ராசிக்கு திரும்புகிறார். இந்த மாதத்தின் 12 ராசிகளில் கிரக சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. ஆட்சி பெற்ற சூரியன், உச்சம் பெற்ற புதன், ஆட்சி பெற்ற சுக்கிரன் ஆட்சி பெற்ற சனி என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
இந்த மாதத்தில் ஓணம் பண்டிகை, ஆவணி அவிட்டம், ஸ்ரீ சனி ஜெயந்தி, கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி,கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. பண்டிகைகள் நிறைந்த இந்த மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்
ராசிநாதன் சூரியன் ஆட்சி பெற்று பயணம் செய்யும் மாதம். நிம்மதியும் சந்தோஷமும் அதிகம் நடைபெறும் மாதம், மனதில் உற்சாகம் அதிகரிக்கும் சுறுசுறுப்பு கூடும். பேச்சில் கம்பீரம் அதிகரிக்கும். அதிகார பதவிகள் தேடி வரும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உங்கள் ரசனைக்கு தகுந்த மாதிரி வீடு கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வருவார்கள். வீடு சொத்து வாங்கலாம். புதிய வண்டி வாகனம் வாங்கலாம். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் கூடுதல் சலுகைகள் பொறுப்புகள் கிடைக்கும். சுக்கிரன் இடப்பெயர்ச்சியாக மூன்றாம் வீட்டிற்கு சென்ற பிறகு பண வரவு அதிகரிக்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் நீங்கும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். பண வரவு அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேரும் மாதம். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். குடும்பத்தில் இருந்த மனக்குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். பெரிய பதவி தேடி வரப்போகிறது. பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத பண வரவு வரும். கடன் பிரச்சினைகள் நீங்கும். குருவின் பயணமும் மாத முழுவதும் உற்சாகத்தை கொடுக்கும். புதிய தொழில் தொடங்கலாம். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவரின் அன்பும் பாசமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. மாத பிற்பகுதியில் குரு மீண்டும் மகர ராசிக்கு வந்த பின்னர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆவணி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதம். இறையருள் நிறைந்திருப்பதால் கனவுகள் நிறைவேறும் மாதமாக அமைந்துள்ளது. தினசரி சூரிய நமஸ்காரம் செய்யவும், கண் பிரச்சினைகள் நீங்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கன்னி
ஆவணி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதமாகும்.
கடந்த ஒரு மாத காலமாக லாப ஸ்தானத்தில் இருந்த சூரியன் விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். வருமானம் அதிகரிக்கும் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். வீடு மனை வாங்கும் போது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதன் உங்கள் ராசிக்கு வந்து ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்வதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். மறைமுக எதிர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். சாதகமான அம்சங்கள் அதிகம் நடைபெறும். யோகங்கள் நிறைந்த மாதம். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். நிறைய நன்மைகள் நடைபெறும் மாதம். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மனதில் இருந்த குழப்பம் நீங்கும். சக்திகள் கூடி வரும் மாதம். பொருளாதார வரவு அதிகம் இருப்பதால் கடன் பிரச்சினைகள் நீங்கும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம். சகோதரர்களின் உதவி கிடைக்கும். சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கு சென்று ஆட்சி பெற்று அமர்வதால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சந்தோஷங்கள் அதிகம் நடைபெறும் மாதமாக அமைந்துள்ளது. இறைவனின் அனுகிரகத்தால் மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கப் போகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவைப்படும் அலர்ஜி பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. இந்த மாதம் வெள்ளிக்கிழமைகளில் காஞ்சி காமாட்சி அம்மனை வணங்குங்கள். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள் சந்தோஷம் அதிகரிக்கும்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, லாப ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் பண வரவு அதிகரிக்கும். வீடு கட்ட அப்ரூவல் வாங்கலாம். வீடு கட்டுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. சுக்கிரன் நீச்சபங்கம் பெற்று பயணம் செய்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் உங்கள் ராசிக்கு வந்து ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். திருமணம் சுப காரியம் கை கூடி வரும். புதிய வீட்டிற்கு இடம் மாறுவீர்கள் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். சகோதரர்கள் ஆதரவாக பேசுவார்கள். பெற்றோர்களின் ஆசி கிடைக்கும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. தொழில் தொடங்கலாம். வீடு பராமரிப்பு செய்வீர்கள் வீட்டினை அழகு படுத்துவீர்கள். அர்த்தாஷ்டம சனி காலமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப காரிய தடைகள் நீங்கும். நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். ஸ்ரீரங்கநாதரை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்கி வர நன்மைகள் அதிகம் நடைபெறும். காளியை வணங்க கவலைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
புதன் போக்கு அற்புதமாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து நல்ல காரியம் நடைபெற்றும். பெரிய பொறுப்புகள், கடமைகள் தேடி வரும். பிள்ளைகளால் சந்தோஷம். அதிகமான லாபம் கிடைக்கும். மகனுக்கோ மகளுக்கோ திருமணம் கை கூடி வரும். வீடு கட்டும் யோகம் கை கூடி வரும். மன சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தொட்டது துலங்கும் மாதம். வங்கியின் பண வரவு அதிகரிக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. மேலதிகாரிகளுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல ரிசல்ட் தேடி வரும். அரசியல் பதவிகளில் இருப்பவர்களுக்கு திறமை வெளியே தெரியவரக்கூடிய மாதமாக அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் அகவலைப் படிக்க நன்மைகள் நடைபெறும். முருகப்பெருமானை வணங்க நன்மைகள் நடைபெறும். ஆவணி மாதம் அற்புதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications