ஆவணி மாத ராசி பலன் 2023: சிம்ம ராசியில் வக்ரமடையும் புதன்.. இந்த 5 ராசிக்காரர்கள் கவனம்
சென்னை: ஆவணி மாதம் சிம்ம மாதம். இந்த மாதத்தில் சூரியன் தனது ராசி வீடான சிம்ம ராசியில் பயணம் செய்வார். கூடவே புதன் இணைந்துள்ளார்.
21 நாட்கள் புதன் வக்ரம் பெறுகிறார். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
மேஷம்: சூரியன் புதன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வது சிறப்பு. வீடு வாகனம் வாங்கலாம். நினைத்த காரியம் நிறைவேறும். ராசிநாதன் செவ்வாய் 6ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். புதன் வக்ரம் பெறுகிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நரம்பு பிரச்சினைகள் வரலாம். மாணவர்கள் கவனத்தோடு படிப்பது நல்லது. மேஷ ராசியில் ராகு குரு சேர்க்கை ராசியில் உள்ளது. திருமண சுப காரியம் நடைபெறும். மாணவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.

ரிஷபம்: பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. அவசரப்பட்டு பேசி ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள். வாகன பயணங்களில் கவனம் நிதானம் அவசியம். முக்கியமான பொருட்களை கவனமாக வைத்துக்கொள்வது நல்லது. பணம், நகை விலை உயர்ந்த பொருட்களில் கவனம். அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர்கள் கவனம். திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சுக ஸ்தானத்தில் புதன் வக்ரமடையும் காலத்தில் கவனம் பங்குச்சந்தை முதலீடுகள் தவிர்க்கலாம். சக்கரத்தாழ்வார் வழிபாடு நன்மை.
மிதுனம்: நல்ல செய்தி தேடி வரும். அரசு வேலை கிடைக்கும். ஆன்லைன் தொழில் செய்பவர்களுக்கு லாபம் வரும். 2ஆம் வீட்டில் சுக்கிரன் வக்ரம் அடைந்து பயணம் செய்கிறார். பேசும் வார்த்தைகளில் கவனம். பணம் விசயங்களில் கவனம் தேவை. வர வேண்டிய பணம் தள்ளி போகும். நிறைய நல்ல விசயங்கள் பெறும். ராசி நாதன் புதன் 3ஆம் வீட்டில் வக்ரமடைகிறார். தடைகள் வந்து நீங்கும். சொத்து வாங்கும் விசயங்களில் கவனம் தேவை. தாய்மாமன் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை வரலாம். லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் நடைபெறும்.
கடகம்: ஆவணி மாதத்தில் சூரியன் புதன் சேர்க்கை அற்புதமாக உள்ளது. பேச்சினால் காரியம் சாதிப்பீர்கள். இரண்டாம் வீட்டில் புதன் வக்ரமடைவதால் கவனம். பேச்சில் கவனம். வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள் சிக்கலாகி விடும். குடும்ப விசயங்களை வெளி நபர்களிடத்தில் பேசாதீர்கள். ராசியில் சுக்கிரன் வக்ரமாக இருப்பதால் நிதானம் அவசியம். வீண் வம்பு வழக்குகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள். வண்டி வாகன பயணங்களில் கவனம் தேவை. நல்ல காரியங்களில் தடைகள் வர வாய்ப்பு உள்ளது. அனுமன் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.
சிம்மம்: ராசியில் சூரியன் புதன் பயணம் செய்கிறார்கள். படுக்கை அறையில் கவனம் தேவை. சுக்கிரன் 12ஆம் வீட்டில் வக்ரமடைந்து பயணம் செய்கிறார். 8 நாட்களுக்கு ராஜ யோகம் தேடி வரும். ராசியில் ராசி அதிபதி ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். ராசியில் புதன் வக்ரமடைகிறார். படிப்பில் மந்தநிலை ஏற்படும். கவனம் தேவை. களத்திர ஸ்தானத்தில் சனி வக்ரமடைகிறார். கடன் பிரச்சினைகள் வந்து நீங்கும். நோய் பாதிப்புகள் பிரச்சினையை தரும். புதிய விசயங்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் தற்போது தேவையில்லை.
கன்னி: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன் புதன் பயணம் செய்கின்றனர். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் வக்ரமடைந்து பயணம் செய்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் வக்ரமடைகிறார். கன்னி ராசிக்காரர்கள் பண விசயங்களில் கவனம் தேவைப்படும். யாரை நம்பியும் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம். நட்பு கூட இந்த கால கட்டத்தில் பகையாக மாறும். வண்டி வாகனங்களை இரவல் தர வேண்டாம். நகை விசயத்தில் கவனம் தேவை. தொழில் வேலையில் இடமாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தூக்க குறைபாடுகள் வரலாம் கவனம் தேவை. ராசி நாதன் விரைய ஸ்தானத்தில் வக்ரமடைவதால் நரம்பு பிரச்சினைகள் வரலாம் கவனம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications