ஆவணி மாத ராசி பலன் 2026: சூரியன் சிம்மம் பெயர்ச்சி.. இந்த 6 ராசியினருக்கு எச்சரிக்கை
ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் வரும் 17 ஆம் தேதிபிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 6 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 7.50 மணிக்கு சூரிய பகவான் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், சூரியன் சிம்மத்தில் பெயர்ச்சியாவதால் என்னென்ன ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்
மேஷம் ராசியினருக்கு இந்த ஆவணி மாதத்தில் நிறைய வெற்றிகள் வரக்கூடிய அமைப்பு உள்ளது. ஏழரை சனி இருப்பதால் நிறைய டென்ஷன்கள் வந்து போகும். உடற்பயிற்சியை தினந்தோறும் செய்து வருவது நன்மையைத் தரும். எல்லாருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்து உங்களை வருத்திக் கொள்ளாமல் இருங்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
மற்றவர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் கோபப்படுவது, டென்ஷனாவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குரு பார்வை இருப்பதால் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
முயற்சிகளில் வெற்றி
புதிய புதிய முயற்சிகளில் இறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய அமைப்பு உள்ளது. வேற்று மொழி பேசும் நபர்களால் ஆதாயம் உண்டாகும். அரசியலில் அனுகூலம் ஏற்படும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். பிள்ளைகள் விஷயங்களில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. அபிராமி அந்தாதியை தினந்தோறும் கேட்பது நன்மையைத் தரும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு விலை உயர்ந்த பொருள்களை கையாளக்கூடிய கன்னி ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கழுத்து, சுழுக்கு, தோள்பட்டை போன்ற பகுதிகளில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நியாபக மறதியால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு ஏற்படும். துணை ஒன்று சேரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றங்கள் உண்டாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சுப விரயங்கள் ஏற்படும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வண்டி வாகனம் வாங்குவது, ஆடைகள், ஆபரணங்கள் வாங்குவது போன்ற யோகங்கள் ஏற்படும்.
மாற்றம், முன்னேற்றம்
வேலை, தொழில் என்றே இருக்காமல் உங்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்குவது நன்மையைத் தரும். ஞாயிற்றுக்கிழமை தோறும் மதிய வேளைகளில் ஏழைகளுக்கு உணவு தானமாகக் கொடுப்பது விரயத்தில் இருந்து பாதுகாக்கும் உடற்பயிற்சி, ஸ்டிரெட்சிங் போன்றவற்றை செய்வது நல்லது. உடல் ரீதியாக, மன ரீதியாக கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு செல்வாக்கு கூடும் காலகட்டம். மிகப்பெரிய மாற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகளும், சங்கடங்களும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பண வரவில் இருந்து வந்த சிக்கல் தீரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும்.
சிக்கல் தீரும்
உயர்கல்வி, நிதிநிலை தொடர்பான சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு தானம் அளிப்பது நன்மையைத் தரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வந்து செல்வதால் சந்தோஷம் ஏற்படும்.
பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ரத்த அழுத்தம், சர்க்கரை கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. உங்களுடைய வாழ்க்கையில் நேரம் நேர்மறையான மாற்றங்களை வளர்ச்சியும் கொண்டு வர, நேரத்தை வீணடிக்காமல் கவனமாக வேலை செய்து முடிப்பது நன்மையைத் தரும்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசியினர் வண்டி வாகனம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளால் தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகள், சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும்.
விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் வண்டிகளில் செல்லும்போது கவனம் தேவை. பிள்ளைகளுடன் இருந்து வந்த சிக்கல்கள், பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம், அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. கணவன், மனைவி இருவருமே உடல்நலனில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும்.
கவனம்
பயணங்கள் சமயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வேகமாக செல்வது, போதைப் பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை இயக்குது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்திலும், வெளியிடத்திலும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இனிமையான வார்த்தைகளை எல்லோரிடமும் பயன்படுத்துவது நல்லது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசியினர் கணவர், மனைவி இருவர் விஷயத்திலும் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும். உங்களுடைய மறைமுக எதிரிகள் பலம் உயர்ந்துள்ளதால் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மை பயக்கும். உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களைத் தவிர்க்கும் சூழல் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
அனுகூலம்
60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நன்மைகளும், அனுகூலமும் ஏற்படும். 70 வயதைக் கடந்தவர்கள் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. படிக்கட்டில் மெதுவாக செல்வது நல்லது. பழக்கவழக்கத்தில் பேராசை படாமல் இருப்பது நல்லது. தங்கள் வயதை மறந்துவிட்டு சிறுவர் போல மற்றவர்களிடம் நடந்து கொள்வதை, தர்க்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
நம்பிக்கை
இளம் வயதைச் சார்ந்த கும்ப ராசியினருக்கும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து வித மாற்றங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications
