தனுசு ராசிக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.. ஆவணி மாதத்தில் பண சிக்கல் தீரும், வெற்றி குவியும்

Subscribe to Oneindia Tamil

ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், தொழில், குடும்பம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

aavani-month-rasi-palan-what-benefits-will-dhanusu-rasi-people-get-this-month

இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், தனுசு ராசியினருக்கு தொழில், உத்தியோகம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு செல்வாக்கு கூடும் காலகட்டம். மிகப்பெரிய மாற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகளும், சங்கடங்களும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பண வரவில் இருந்து வந்த சிக்கல் தீரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும்.

சிக்கல் தீரும்

ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு தானம் அளிப்பது நன்மையைத் தரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வந்து செல்வதால் சந்தோஷம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ரத்த அழுத்தம், சர்க்கரை கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.

மகிழ்ச்சி

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ரத்த அழுத்தத்தில் மிகுந்த கவனம் தேவை. நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

அனுகூலம்

பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைக் தீரும். குலதெய்வ வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு ஏற்றத்தைத் தரும். மன அழுத்தம் தீரும். வயிறு தொடர்பான பாதிப்புகள் நீங்கும். உணவு செரிமானம் ஏற்படும். நல்ல மருத்துவர், மருந்துகள் கிடைக்கும். கோயில்களுக்குச் செல்வது, சுற்றுலா செல்வது, நண்பர்கள், உறவினர்களுடன் வெளியில் செல்வது போன்ற அமைப்பு உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+