ஆட்டத்தை ஆரம்பிக்கும் மீன ராசி.. ஆவணி மாதத்தில் காத்திருக்கும் பிரகாசமான மாற்றம்
ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், தொழில், குடும்பம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், மீனம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசியினருக்கு பண வரவு அற்புதமாக இருக்கும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடப்பதற்கான யோகம் உண்டாகும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்துவித முன்னேற்றங்களும் உண்டாகும். ஆன்மீக சுற்றுலா, இன்ப சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும்.
நம்பிக்கை
உத்தியோகம் நிமித்தமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். பிரிந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேரும் யோகம் உண்டாகும். இடமாற்றங்கள் பெரிய அளவு நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். யோக பலத்தை அதிகமாகப் பெறும் காலகட்டம். உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருந்த சங்கடங்கள், கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும்.
செல்வாக்கு
தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தெய்வத்தின் கடாட்சம் உண்டாகும். அரசியல்வாதிகள், அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகள், புதிய அமைப்பு, போனஸ் கிடைக்கக்கூடிய யோகம் உண்டாகும். வாகனத்தில் அனுகூலம் காணப்படும்.
சுபகாரியம்
அசையும், அசையா பொருள் சேர்க்கை ஆனந்தத்தை ஏற்படுத்தும். தடைபட்டிருந்த எல்லா விதமான சுபகாரியங்களும் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். புதிதாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தனிப்பட்ட முறையில் உங்கள் செல்வாக்கு கூடும். பதவி உயர்வில் இருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும்.
தொழில்
அரசு வேலை, போலீஸ் வேலை, ராணுவ வேலை, சீருடை வேலைகளுக்காக காத்திருந்தவர்களுக்கு இந்த ஆவணி மாதத்தில் ஜெயமும், சந்தோஷமும் உண்டாகும். புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கீழ் முதுகு தண்டுவடம் தொடர்பான உடற்பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும். ராகவேந்திரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். மகான்கள் தரிசனம், குலதெய்வ தரிசனம் மேற்கொள்வீர்கள்.


Click it and Unblock the Notifications
