சொல்லி அடிக்கும் மிதுன ராசி.. ஆவணி மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், தொழில், குடும்பம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

aavani-month-rasi-palan-what-benefits-will-mithunam-rasi-people-get-this-month

இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், மிதுன ராசியினருக்கு தொழில், உத்தியோகம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

மிதுன ராசி பலன்

மிதுனம் ராசியினருக்கு சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். வாகனத்தில் அனுகூலம் ஏற்படும். அறுவை சிகிச்சை போன்றவற்றை செய்து மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்புவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டம்

திடீர் புகழ், அதிர்ஷ்டங்கள், பண வரவு போன்றவை ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். நிறைய ஏற்றங்கள் காணப்படும். உத்தியோகத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூணமாக நீங்கும்.

சிக்கல் தீரும்

பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்வீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.

குரு அருள்

இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான முன்னேற்றங்களும் காணப்படும். குரு பார்வையில் இருந்தாலும், குரு 2 ஆம் இடத்தில் இருப்பதால் குடும்பத்துக்குத் தேவையான எல்லா விஷயங்களும் ஏற்படும். வார்த்தையில் மட்டும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

பயணம், தொழில், உத்தியோகம், வியாபாரம், குடும்பம், வெளியிடம் என அனைத்து இடங்களிலும் பேசும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கெட்ட வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது நல்லது. கழிவுப் பாதையில், மறைமுக ஸ்தானங்களில் பாதிப்புகள், தொற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளது. முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+