தடைகளைத் தகர்த்தெறியும் சிம்ம ராசி.. ஆவணி மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்
ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், தொழில், குடும்பம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், சிம்ம ராசியினருக்கு தொழில், உத்தியோகம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு நோய், கடன், குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எந்த காரியத்தை தொட்டாலும் அதில் ஒரு தடை என்கிற நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். எல்லா விதமான தடை தாமதங்களில் இருந்தும் தப்பிக்கும் மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமையும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன், பதவியுடன் கூடிய வேலை கிடைக்கும்.
திருமண யோகம்
திருமணத்திற்கு முயற்சி செய்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் கட்டாயமாக நல்ல வரன்கள் அமையும். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடுகள் செல்ல விரும்புவோருக்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். விசா கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
வெளிநாடு யோகம்
மாணவர்களுக்கு வெளியூர், வெளிநாடு சென்று படிப்பதற்கான யோகம் உண்டாகும். அதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் சண்டை, பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். காதலிப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்கக்கூடிய மாதமாக இருக்கும். தேவையில்லாத சண்டைகள், பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை.
ஆரோக்கியம்
நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கோபம், இயலாமை, படபடப்பு போன்றவற்றில் கவனம் தேவை. 30 வயதைக் கடந்தவர்கள் உங்கள் நண்பர்களிடம் உங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வது நன்மையைத் தரும். சிம்மத்திற்கு ஆரோக்கியம், வாகனங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும். விநாயகர், அனுமன் வழிபாடு நன்மையைத் தரும்.
கவனம்
கணவன், மனைவியால் தேவையில்லாத சங்கடங்கள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். உறவுகள் விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். பெற்றோர், பெரியோர்களுக்கு கெளரவம் ஏற்படும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். மேலதிகாரிகளின் தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். புதிய கூட்டாளிகளால் ஏற்றம் ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும். பெண்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நல்லவர்கள் போல பேசி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதால் உறவுக்காரர்களிடம் மிகுந்த கவனம் தேவை.


Click it and Unblock the Notifications
