ஆவணி மாதத்தில் அதிர்ஷ்டம் கொட்டும் துலாம் ராசி.. லாபம், மரியாதை அதிகரிக்கும்
ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், தொழில், குடும்பம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், துலாம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த லட்சியங்களை அடையக் கூடிய அமைப்பு உள்ளது. இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
மரியாதை
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதற்குத் தகுந்தவாறு முடிவுகளை எடுத்து செயல்படுவது நன்மையைத் தரும். இதன் மூலம் உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு ஆழமாகவும், வலுவாகவும் இருக்கும். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தைத் தரும்.
தற்பெருமை வேண்டாம்
யாரைப் பற்றியும் வருத்தப்பட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தற்பெருமை பேசுவதைத் தவிர்ப்பது நன்மையைத் தரும். நீங்கள் இப்போது இருக்கும் நிலையை நினைத்து நன்றி செலுத்துவது நல்லது. உறவுகள், ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்
வானங்களில் மாற்றம் ஏற்படும். குரு பகவான் 12 ஆம் இடத்தில் இருப்பதால் குடும்பம், தொழில், உத்தியோகம் போன்றவை வாய்ப்பிருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள், துணையிடம் இணக்கமாக நடந்து கொள்வது ஏற்றத்தைத் தரும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். முதுகு தண்டுவடப் பிரச்சனை, சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
