57 வருடங்களுக்குப் பிறகு மீன ராசியில் நடக்கும் அதிசயம்..பணத்தை அள்ளப் போகும் 5 ராசிகள் எது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன ராசியில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 29 ஆம் தேதி 6 கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளதால் 5 ராசிக்காரர்கள் அற்புதப் பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களின் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடத்தை மாற்றுவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, கிரகங்களின் சேர்க்கையும் 12 ராசிகளுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

astrology lucky zodiac signs

இந்த கிரக சேர்க்கை ஒவ்வொரு ராசிக்கும் நல்ல பலன்களையும், கெடுபலன்களையும் தர வாய்ப்புள்ளது. அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி 57 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் 6 கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது. மீன ராசியில் சூரியன், சனி, ராகு, சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரக சேர்க்கை நடைபெறவுள்ளதால் சில ராசியினர் நற்பலன்களைப் பெறப் போகின்றனர்.

மீனத்தில் ராகு பகவான் ஏற்கனவே சஞ்சாரம் செய்து வருகிறார். சுக்கிர பகவான் மீனத்திற்கு ஜனவரி 28 ஆம் தேதி மாறுகிறார். பிப்ரவரி 27 ஆம் தேதி புதன், மார்ச் 14 இல் சூரியன், மார்ச் 29 இல் சனி, சந்திரன் ஒரே நாளில் மீன ராசிக்கு பெயர்ச்சியாகின்றனர். இதனால், மீன ராசியில் மார்ச் 29 இல் 6 கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்த சேர்க்கையால் 5 ராசிக்காரர்களும் அதிர்ஷ்டமும், நற்பலன்களும் பெறப் போகின்றனர். எந்த ராசியினர் பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்: மீன ராசியில் 6 கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளதால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. அனைத்து சவால்களையும் எளிதில் முறியடித்து வெற்றி அடைவீர்கள். நிதி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். உங்களுடைய இலக்குகளை அடைய கவனமாக உழைப்பதன் மூலம் வெற்றியைக் காண்பீர்கள். ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சமுதாயத்தில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் அனைத்தும் நீங்கும். உறவுகளில் இருந்து வந்த பதற்றங்கள் சரியாகும். பணம் சார்ந்த விஷயங்களால் நன்மை பெறுவீர்கள்.

மிதுனம்: 6 கிரகங்களின் சேர்க்கையால் மிதுன ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். எதிர்பாராத பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இணக்கமான சூழல் உருவாகும். குடும்பத்தில், அலுவலகத்தில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதற்கான சூழல் அமையும். உங்களுடைய நேர்மையான செயல்பாடு மற்றும் இனிமையான பேச்சால் காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். செய்யும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பது நல்லது. உங்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வீர்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். செய்யும் செயல்களில் போட்டி, சவால்கள் வந்தாலும் அதில் திறமையுடன் செயல்பட்டு வெற்றியை அடைவீர்கள். உங்களுக்குள் இருக்கும் புதிய திறமைகளைக் கண்டறிந்து செயல்படுவீர்கள். வாழ்க்கையில் புதிய நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம், தொழிலில் நல்ல வாய்ப்புகள், அதன் மூலம் லாபங்களைப் பெறுவதற்கான காலமாக இருக்கும்.

மகரம்: 6 கிரகங்களின் சேர்க்கை மகர ராசியினருக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகிறது. வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வியாபாரம், வணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள், வெற்றிகள் கிடைக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் உங்களுடைய இலக்கினை அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவிலான லாபத்தை அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டாகும். சுற்றுலா செல்வீர்கள். சிறப்பான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.

கும்பம்: மீன ராசியில் 6 கிரகங்களின் சேர்க்கை நடைபெறுவதால் கும்ப ராசியினருக்கு இந்த காலம் சிறப்பானதாக இருக்கும். உங்களுடைய படைப்பாற்றல் அதிகரிக்கும். புதிய திட்டங்கள், இலக்குகள் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நிதி சார்ந்த விஷயங்களில் கனமாக இருப்பது நல்லது. உங்களுடைய முதலீடுகள், சேமிப்புகளால் லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்னைகளுக்கு சரியான தீர்வைக் காண்பீர்கள். மனதில் அமைதி ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலையாவீர்கள். சிறப்பான சலுகை ஒன்று உங்களுக்கு கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+