Dhanusu rasi palan: தனுசு ராசிக்கு கோடிகளில் புரளும் யோகம்.. குரு பார்வையால் ஜாக்பாட் உறுதி
ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்னி ராசிக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்கு ராசியின் அதிபதி 8 ஆம் இடத்தில் உச்சமாவதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு காசு, பணம், செல்வம் செழிப்பு உண்டாகும். திடீர் வருமானங்கள், அதிர்ஷ்டங்கள் ஏற்படும். உங்கள் ஆரோக்கியம், தாயின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
குரு பார்வை
தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பண வரவு, பொருளாதார வளர்ச்சி இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வீடு, மனை, சொத்துக்கள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் 12 ஆம் இடத்தில் ஆட்சி பலம் பெறுவதால் சுப விரயங்கள், சுபச் செலவுகள் ஏற்படும். பயணங்கள் செய்வீர்கள். பயணங்கள் மூலம் நிம்மதி, பயணங்களால் ஆதாயம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
குழந்தை பாக்கியம்
வெளிநாடு பயணம், வெளிநாடு தொடர்பு, வெளிநாட்டில் இருந்து பணம் வரும். குழந்தை பிறப்பதற்கான பாக்கியம் உண்டாகும். குலதெய்வ வழிபாடுகளைச் செய்யும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டில், வெளியூரில் இருப்பவர்கள் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் நிறைந்த மாதமாக இந்த மாதம் இருக்கும்.
யோகம்
6, 11 ஆம் அதிபதி சுக்கிரன் நீசமாவது யோகமாக இருந்தாலும், கடன் சார்ந்த, வேலை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. ராசிக்கு 11 ஆம் அதிபதி 11 ஆம் வீட்டில் ஆட்சி பலம் பெறுவதால் 16 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல லாபங்கள் கிடைக்கும். உங்கள் ஆசைகள், கனவுகள் கட்டாயமாக நிறைவேறும். 6 ஆம் அதிபதி ஆட்சி பலம பெறும் காலகட்டத்தில் கடனை அடைத்து முடிப்பீர்கள்.
புதிய வேலை
நல்ல வேலைகள் உங்களுக்கு கிடைக்கும். நோய் விலகும். வழக்கு உங்களுக்கு சாதகமாக இருக்கும். அரசுத் தேர்வுகளில் வெற்றி பெறவீர்கள். அரசு வேலைகள் கிடைக்கும். சூரியன் நீசமாக இருந்து சுக்கிரனோடு சேரும்போது நீசபங்க ராஜயோகம் உண்டாகும். தந்தையின் மூலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தந்தை சொத்தை அனுபவிக்கும் யோகம் உண்டாகும்.
தந்தையால் அனுகூலம்
தந்தையின் மூலமாக லாபம் கிடைக்கும். அவர் மூலமாக வரும் பிரச்சனைகள் விலகும். தந்தைக்கு உதவி செய்யும் காலகட்டமாக இருக்கும். இந்த மாதத்தில் சுக்ராதித்ய யோகம், நீசபங்க ராஜயோகத்தைப் பெறுவதால் மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். புதன் 12 ஆம் இடத்துக்கு வரும்போது கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
நல்ல லாபம்
தொழிலில் விரயங்கள் வந்தாலும் குரு பார்வை இருப்பதால் பெரிய விரயங்கள் ஏற்படாது. இந்த மாதம் தனுசு ராசிக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். சனி உங்கள் ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக பண வரவு ஏற்படும். முயற்சிகள் கைகூடும். சனி வக்கிரமாக இல்லை எனில் பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications