Kadagam rasi palan: கடக ராசிக்கு சர்வ யோகத்தை அள்ளிக் கொடுக்கும் குரு.. அதிர்ஷ்டம் கொட்டும்
ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்ன ராசக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்குள்ளேயே குரு வருகிறார். 6, 9க்கு உடைய குரு பகவான் ராசிக்குள் உச்சமாகி, சனி பகவானை 9 ஆம் இடத்தைப் பார்க்கிறார். இது உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கக் கூடிய காலமாகும். உங்களுக்கான நல்ல பாதையை வகுத்துக் கொடுப்பார். நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார். வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் கிடைக்கக் கூடிய அமைப்பு உண்டாகும்.
சொத்து கிடைக்கும்
தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும். தந்தை மூலமாக உதவிகள் கிடைக்கும். நல்ல உயர்கல்வி, நின்றுபோன கல்வி கிடைக்கும் யோகம் உள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அக்டோபர் 18 ஆம் தேதிக்குப் பிறகு நிச்சயமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். எந்த வேலைகளைச் செய்தாலும் 18க்குப் பிறகு செய்வது நல்ல பலன்களைத் தரும். எல்லா விஷயங்களும் சாதகமாக இருக்கும்.
கடன் தீரும்
கடன் அடையக் கூடிய காலம். கெட்டவை அனைத்தும் விலகும். 2 ஆம் இடத்தில் கேது இருந்தாலும் சுக்கிரனும் 3 ஆம் இடத்துக்கு நீசமாவதால் 16 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் சொந்த வீட்டுக்கு வந்து ஆட்சி பலம் பெறுகிறார். சூரியன் ஏற்கனவே நீசமாாக இருப்பதால் பண வரவு நன்றாக இருக்கும். ஆனாலும் விரயம் ஏற்படும். பேச்சு வார்த்தையில் பிரச்சனைகள் வரும். கொடுக்கல் வாங்கல், பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. அதில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
திடீர் அதிர்ஷ்டம்
16 ஆம் தேதிக்குப் பிறகு பண விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாப ஸ்தானதிபதி சுக்கிரன் என்பதால் லாபம் அதிகரிக்கும். வீடு,மனை தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். எதிர்பார்த்த பண வரவு உண்டாகும். 5, 10 ஆம் அதிபதியான செவ்வாய் 5 ஆம் வீட்டுக்கு வரப்போகிறார். அங்கு ஆட்சி பலம் பெறுவதால் தெய்வ பலம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்டங்கள் பெருகும்.
தொழில் வளர்ச்சி
தொழில் வளர்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டு. உங்களுக்கு தெரியாத விஷயங்களை உங்களுக்கு யாரோ ஒருவர் சொல்லிக் கொடுப்பார்கள். சிலருக்கு தானாகவே தெரியவரும். மன ரீதியாக வலுப்பெறுவீர்கள். நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். உங்களுடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். யோகமான மாதமாக இருக்கும். திருமணம் சார்ந்த விஷயங்கள் கைகூடி வரும். நண்பர்கள், உறவினர்களிடத்தில் சுமூகமாக இருக்கும் அமைப்பு உண்டாகும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications